Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி பெற்ற உடன் கண் கலங்கிய கோலி.. தூக்கி கொண்டாடிய ரோதிக்.. மெல்போர்னில் மறக்க மடியாத தருணம்

மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியிடம் கடந்த முறை அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி தந்தது.

முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.

8 பந்தில் 28 ரன்

8 பந்தில் 28 ரன்

ராகுல், ரோகித் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்த உடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் 15 ரன்களில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி, ஹர்திக் பாண்டியா இணைந்து பொறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8 பந்துக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரின் கடைசி 2 பந்தில் கோலி சிக்சர் விளாசினார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் விக்கெட், இரண்டாவது பந்தில் சிங்கிள், மூன்றாவது பந்தில் டபுள்ஸ், 4வது பந்தில் நோ பாலில் சிக்சர் , பிறகு ஃபிரி ஹிட்டில் போல்ட் ஆகி 3 ரன்கள் ஓடியது, மீண்டும் 5வது பந்தில் கார்த்திக் அவுட், என கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.

வெற்றி கொண்டாட்டம்

வெற்றி கொண்டாட்டம்

அப்போது நவாஸ் கான் ஓயிடு வீச, அடுத்த பந்தில் அஸ்வின் பவுண்டரி விளாச, இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து விராட் கோலி, ஆனந்த கண்ணீர் விட்டார். வானத்தில் பார்த்த முத்தமிட்ட கோலி, பிறகு மைதானத்தில் கையால் இரண்டு முறை குத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிறந்த இன்னிங்ஸ்

சிறந்த இன்னிங்ஸ்

அங்கிருந்து மைதானத்துக்குள் நுழைந்த ரோகித் , விராட் கோலியை தூக்கி கொண்ட சுற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சுமார் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு முன் இந்திய அணி வீரர்களுடன் கொண்டாடினார். விராட் கோலி முதல் 20 பந்தில் 11 ரன்கள் எடுக்க, அடுத்த 33 பந்தில் 71 ரன்களை கோலி விளாசினார். இதனை தமது சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று விராட் கோலி கூறினார்.

Story first published: Sunday, October 23, 2022, 18:53 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+