IND vs AFG : என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு.. ரோகித் சர்மாவை வச்சு செய்யும் ரசிகர்கள்.. குபீர் மீம்ஸ்!
மொஹலி: இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 14 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியுள்ளார். டக் அவுட்டாகி வெளியேறி இருந்தாலும், இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலமாக ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 டி20 போட்டிகளில் வென்ற அணியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள ”ஃபைட்டர்” படத்தின் போஸ்டருடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபே பவுலிங்கில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அதேபோல் பேட்டிங்கில் 40 பந்துகளில் 60 ரன்களை விளாசி, ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். 4 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணிக்காக அறிமுகமானாலும், தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக உருவாகியுள்ளார். இதனை படிக்காதவன் படத்தில் தம்பியின் நாடகத்தை பார்த்து பாராட்டும் ரஜினியை போல், சிஎஸ்கே ரசிகர்கள் ”நம்ம பய.. நம்ம பய..” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா.
மொஹாலியில் நடைபெற்ற டி20 போட்டியின் போது மைதானம் முழுக்க பனியால் சூழப்பட்டது. அதிகளவிலான குளிர் சூழ்ந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஃபீல்டிங் செய்யவே முடியாத நிலை ஏற்பட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனை ”ஆதவன்” படத்தில் வடிவேலு, ”என்ன ஒரே புகைமோட்டமா இருக்கு” என்று சொல்லுவார். இதன் இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.
அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் மூலம் 14 மாதங்களுக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு திரும்பினார். இதனால் பெரிய ஸ்கோரை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சுப்மன் கில் செய்த தவறால் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை மெர்சல் படத்தில் விஜய், ”முதல் பத்திரிகை உனக்கு” என்று எம்எல்ஏ-வை பார்த்து கூறுவார். அதனை அப்படியே மாற்றி, ”முதல் மேட்ச் சாமிக்கு” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற வெலல்.


Story first published: Friday, January 12, 2024, 10:46 [IST]
Other articles published on Jan 12, 2024


Click it and Unblock the Notifications