Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG - இந்த சிஎஸ்கே வீரர் தான் 3வது வேகப்பந்துவீச்சாளரா? ரோகித்துக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்

மொஹாலி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் கில் களமிறங்கியுள்ளார்.

ஜெய்ஸ்வாலுக்கு காயம் என்பதால் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் அணியின் சஞ்சு சாம்சன் இருந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஜித்தேஷ் சர்மாவுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் இரண்டு பேர் தான் பவுலர்கள் மற்றொருவர் ஆல்ரவுண்டர்.

India vs afghanistan - 2 Reasons behind shivam dube inclusion in playing xi

முகேஷ் குமார் மற்றும் ஆர்ஸ்தீப் சிங் வேகப்பந்துவீச்சாளராக களம் இறங்குகிறார்கள். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரோகித் சர்மா எடுத்த இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணங்களை தற்போது பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனுக்கு திரும்பக்கூடாது என்பதற்காக ஒரு அதிரடி ஆல்ரவுண்டரை அணிக்குள் கொண்டுவர ரோகித் சர்மா எடுத்த முயற்சியாக தான் பார்க்கப்படுகிறது.

இதேபோல் இன்றைய ஆட்டத்தில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய் என்ற மூன்று ஸ்பின்னர்கள் அணியில் இருப்பதால் அவர்களை வைத்து ஓவர்களை நகர்த்த ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார். இதேபோன்று ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வைத்து போட்டியை ரோகித் சர்மா நகர்த்துவார். தேவைப்பட்டால் சிவம் துபேவிடமிருந்து இரண்டு ஓவர்களை ரோகித் சர்மா பெற்றுக் கொள்வார்.

சிவம் துபேவுக்கு மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெரிய பொறுப்பை உடனடியாக கொடுக்காமல் மெல்ல மெல்ல அவருக்கு பணியை கொடுத்து அவர் அதில் எப்படி செயல்படுகிறார் என்பதையே ரோஹித் சர்மா பார்க்கிறார். இதில் ரோகித் சர்மாவின் நம்பிக்கையை சிவம் துபே காப்பாற்றி விட்டால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, January 11, 2024, 19:52 [IST]
Other articles published on Jan 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+