IND vs AFG - 3வது டி20யில் ரோகித் சர்மா, ரிங்கு சிங் படைத்த சாதனை விவரம்.. பல ரெக்கார்டுகள் உடைந்தது
பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 212 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஐந்து ஓவரில் 103 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இந்த நிலையில் இந்த போட்டியில் ரிங்கு சிங் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகளை தற்போது பார்க்கலாம். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 25 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்த பிறகு இமாலய இலக்கை எட்டியது.இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 16 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது சாதனையாக பார்க்கப்பட்டது. இதேபோன்று டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை ரோகித் சர்மா ரிங்கு சிங் படைத்திருக்கிறார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ரோகித், ரிங்கு 190 ரன்கள் குவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு சஞ்சு சாம்சன் தீபக் கூட ஆகியோர் அயர்லாந்துக்கு எதிராக 176 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக பார்க்கப்பட்டது. இதேபோன்று டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா ரிங்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் சேர்த்தார்கள்.
இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது நான்காம் இடத்தை பிடித்துள்ளார் கில் 126 ரன்கள் ருதுராஜ் 123 ரன்களும், விராட் கோலி 122 ரன்களும், ரோகித் சர்மா 121 ரன்களும் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று சர்வதேச t20 கிரிக்கெட்டில் 5 சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications