IND vs AFG -கடைசி 5 ஓவரில் 103 ரன்கள்.. தெறிக்கவிட்ட ரோகித் சர்மா, ரிங்கு சிங்.. 6 பந்தில் 5 சிக்சர்
பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக கடைசி 5 ஓவரில் இந்த ஜோடி 103 ரன்கள் குவித்து மிகப் பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
இதன் மூலம் 22 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோர் தடுமாறிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. 15வது ஓவர் வரை இந்திய அணி ஸ்கோர் 109 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற நிலையில் தான் இருந்தது.

இதன் அடுத்து 16வது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 22 ரன்களை குவித்தனர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரிகள் சென்றது. இதன் அடுத்து 17 வது ஓவரிலும் இந்த ஜோடி பட்டையை கிளப்பியது. ஒரு சிக்ஸ், ஒருபோர் என மொத்தம் இந்த ஓவரில் 13 ரன்கள் ரோகித் ரிங்கு சிங் அடித்தார்கள்.
இதனை அடுத்து 18 ஆவது ஓவரில் கொஞ்சம் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். எனினும் இதில் ஒரு பவுண்டரி, நான்கு சிங்கிள் ஒரு டபுள் என மொத்தம் 10 ரன்கள் சென்றது. இதை அடுத்து 19வது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் அதிரடியை காட்டினர். இதில் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் என மொத்தம் 22 ரன்கள் குவிக்கப்பட்டது.இதனை அடுத்து கடைசி ஓவரில் இருவரும் அபாரமாக விளையாடி மொத்தம் 36 ரன்கள் குவித்தார்கள்.
இதில் 5 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டது.குறிப்பாக இருபதாவது ஓவரில் இரண்டாவது பந்து ரோகித் சர்மா ஒரு சிக்சர் அடிக்க அது நோபால் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து மீண்டும் அந்த பால் போடப்பட அதனையும் ரோகித் சர்மா சிக்சர் அடித்தார். இதன் மூலம் கடைசி ஓவர் மட்டும் 36 ரன்கள் அடிக்கப்பட்டது. இதை அடுத்து கடைசி 30 பந்துகளில் இந்திய அணி 103 ரன்கள் குவித்து 200 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தது.


Click it and Unblock the Notifications