Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோல்டன் டக்கான விராட் கோலி.. வாயடைத்து போன பெங்களூரு ரசிகர்கள்.. பழிக்கு பழிவாங்கிய ரோகித் ஃபேன்ஸ்

பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்திலே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச t20 போட்டி இது என்பதால் இந்த போட்டியை பெங்களூர் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

India vs afghanistan 3rd t20- virat kohli golden duck made fans disapppointment

இதற்கு முக்கிய காரணம் வெகு நாட்களுக்குப் பிறகு விராட் கோலி டி 20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூருவில் விளையாடுகிறார். ஆனால் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றமே அமைந்தது. முதல் இரண்டு டி20 போட்டியில் டக் அவுட் ஆகி ரோகித் சர்மா வெறுப்பேற்றினார். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலே தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

இதனை ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கோலி வரும்போது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்ற உற்சாகமாக குரல் கொடுக்க அடுத்த நொடியே சர்வ அமைதியாக மைதானம் மாறியது. இந்த நிலையில் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு மட்டும் இது சந்தோஷமாக அமைந்தது. ஏனென்றால் ரோகித் சர்மா இரண்டு முறை டக் அவுட் ஆன பிறகு கோலி ரசிகர்கள் அவரை கிண்டல் செய்ய தொடங்கினர்.

தற்போது ரோகித் ரசிகர்கள் விராட் கோலியை கிண்டல் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஜெயஸ்வால் நான்கு ரன்களில் ஆட்டம் இழக்க விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஒரு முறை கூட எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோற்றதில்லை. ஆனால் இன்று முதன்முறையாக இந்தியா தோற்றுவிடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, January 17, 2024, 19:42 [IST]
Other articles published on Jan 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+