Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG-ரோகித் மட்டும் தான் பெரிய ஏமாற்றம்.. ஆனால், இதை பற்றி கவலைப்பட மாட்டார்- முரளி கார்த்திக்

மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும்தான் ஏமாற்றம் அளித்திருப்பதாக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் சிவம் துபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக இரண்டு முறை டக்அவுட் ஆகி வெளியேறினார்.

India vs afghanistan- Captain Rohit sharma is the only Failure says Murali karthik

14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணியில் திரும்பிய ரோகித் சர்மா முதல் போட்டியில் ரன் அவுட் மற்றும் இரண்டாவது போட்டியில் இறங்கி வந்து சிக்சர் அடிப்பதற்கு முயற்சி செய்து போல்ட் ஆனார்.

எனினும் ரோஹித் சர்மாவின் இந்த ஏமாற்றம் இந்திய அணியை பெரிய அளவில் பாதிக்கவில்லை. காரணம் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகியோர் சிறப்பாக விளையாடி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற வைத்தனர்.

கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முரளி கார்த்திக் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஒரே ஒரு ஏமாற்றம் கேப்டன் ரோகித் சர்மா மட்டும்தான் என கூறியுள்ளார். இரண்டு போட்டிகளுமே அவர் டக் அவுட் ஆகி இருக்கிறார். எனினும் இது குறித்து அவர் பெரிய அளவில் கவலை கொள்ள மாட்டார்.

இந்த டி20 தொடரில் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பங்கேற்று இருக்கிறார். அதுவும் கேப்டனாக வந்திருக்கிறார். முதல் போட்டியில் ரன் அவுட் இரண்டாவது போட்டியில் போல்ட் என ரோகித் சர்மா அவுட் ஆனாலும் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது என்று முரளி கார்த்திக் கூறியுள்ளார்.தற்போது மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி கடந்த இரண்டு முறை டக் அவுட் ஆனதற்கு பழி தீர்த்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவில் பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்றாலும் இந்த தொடரில் அவர் டாம்க் அவுட் ஆனதால் அவருடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் கிடையாது. அதேசமயம் கில் தன்னுடைய இடத்தைப் பிடிக்க கடுமையாக போராடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 15, 2024, 14:03 [IST]
Other articles published on Jan 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+