மொஹாலி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சிவம் துபே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக கலக்கி ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு ஆப்பு வைத்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலகியதற்கு ஹர்திக் பாண்டியாவின் உள்ளடி வேலையே காரணம் என்று புகார் எழுந்தது தான். மும்பை அணிக்கு வந்தால் கேப்டன் பதவிக்கு தான் வருவேன் என்று கூறியதால் மும்பை அணி வேறு வழியில்லாமல் ரோகித் சர்மாவை தூக்கியது.

இதனை அடுத்து இரு வீரர்களுக்குமே பனிப்போர் ஏற்பட்டது. இதனால் டி20 லிருந்து விலகி இருந்த ரோகித் சர்மா கேப்டன் பதவிக்கு திரும்பி டி20 உலக கோப்பை க்கும் விளையாட முடிவெடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்.
இதனால் ரோகித் சர்மா திடீரென்று அணியிலிருந்து நீக்கப்பட்ட சிவம் துபேவை பிளேயிங் லெவனுக்கும் கொண்டு வந்தார். இதற்கு காரணம் சிவம் துபே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கினால், இதனை காரணமாக காட்டி ஹர்திக் பாண்டியாவை வெளியே உட்கார வைத்து விடலாம் என்பது தான் ரோகித் சர்மாவின் திட்டம்.
ஆனால் சிவம் துபே ரோகித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்ற கேள்வி எழுந்தது. முதலில் பந்து வீசிய இந்திய அணியில் சிவம் துபே இரண்டு ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனால் பவுலிங்கில் சிவம் துபே தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார்.
பேட்டிங்கில் சிவம் துபே நான்காவது வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியபோது சிவம் துபே களத்திற்கு வந்தார். அதிரடியாக விளையாடிய சிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சிவம் துபே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு முக்கிய வீரராக சிவம் துபே இருப்பார் என்று கருதுகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தான் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம் சிவம் துபேவை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு அடிக்கலாம் என்பதுதான் ரோகிதின் மாஸ்டர் திட்டமே.