For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைக்க போகும் இந்தியா.. பாக். ரெக்கார்டுக்கு ஆப்பு ரெடி

மும்பை : இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் சம்பிரதாய ஆட்டமாக இன்றைய போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் அது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க உதவும்.

India vs afghanistan - India is all set to create New record in T20 History

இதுவரை சர்வதேச t20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு தொடரை வைட்வாஷ் செய்த சாதனையை இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து படைத்திருக்கிறது. இதுவரை இரு அணிகளும் தலா எட்டு முறை டி20 கிரிக்கெட்டில் ஒயிட் வாஷ் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தினால் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்று கணக்கில் ஒயிட் வாஷ் செய்து 9 ஒயிட் வாஷ்களை செய்த ஒரே அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும்.

அதே சமயம் ஆப்கானிஸ்தான அணி இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஒரு வெற்றியை கூட பெற்றது கிடையாது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியா தோற்றது கிடையாது. இதனால் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவுக்கு தான் இந்த போட்டியில் மிகவும் முக்கியமாகும். ஆப்கானிஸ்தானை வீழ்த்துவது மட்டுமல்லாமல் 9 முறை ஒயிட் வாஷ் செய்த அணி என்ற பெருமையை ரோகித் சர்மா தலைமையிலான அணி படைக்கும் .

இந்திய அணி கடந்த இரண்டு டி20 போட்டிகளிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டியில் 17.3 ஓவர்களில் 159 ரன்களை எட்டிய இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் 15 புள்ளி நான்கு ஓவர்களில் 173 ரன்கள் எட்டி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 14 மாதங்களுக்கு பிறகு விளையாடுகிறார்கள். இதில் விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் அடிக்க ரோகித் சர்மா இந்த தொடரில் இதுவரை ஒரு ரன் கூட எடுக்காமல் இருக்கிறார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Story first published: Wednesday, January 17, 2024, 15:35 [IST]
Other articles published on Jan 17, 2024
English summary
India vs afghanistan - India is all set to create New record in T20 History டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைக்க போகும் இந்தியா.. பாக். ரெக்கார்டுக்கு ஆப்பு ரெடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+