For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டி20 அணி கேப்டன்களில் ரோகித் தான் டாப்.. தோனி சாதனை சமன்

மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் ரோகித் சர்மா திரும்பி இருக்கிறார்.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரை வென்றதன் மூலம் ரோகித் சர்மா கேப்டனாக புதிய சாதனை ஒன்றை செய்திருக்கிறார். அதன்படி சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற இந்தியர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

India vs afghanistan- Rohit sharma equals MS Dhoni record for Most T20I win as captain


53 டி20 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தோனி இருக்கிறார். 72 போட்டிகளில் டி20 அணியின் கேப்டனாக இருந்து 41 போட்டிகளில் வென்றிருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். கோலி 50 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து 30 போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார்.


இந்த பட்டியலில் நான்காவது இடத்தை ஹர்திக் பாண்டியா பிடித்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா 16 போட்டிகளில் விளையாடி வெறும் 10 போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார். கேப்டனாக ரோகித் சர்மா சாதனையை படைத்தாலும் ஒரு பேட்ஸ்மனாக சோகமான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை இந்திய வீரர் என்ற சோக சாதனையை ரோகித் சர்மா படித்திருக்கிறார். 12 முறை டக்அவுட் ஆகியிருக்கிறார்.


இதேபோன்று ஃபுல் மெம்பர்ஸ் அணிகளில் கேப்டனாக அதிக டக்குகளை பெற்றவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆரோன் பிஞ்ச் 8 டக் அவுட் பெற்று முதலிடத்திலும் ரோஹித் சர்மா ஆறு டக் அவுட் கேப்டனாக பெற்றிருக்கிறார். இதைப் போன்று டி20 கிரிக்கெட் வரலாற்றிலே அதிக டக்அவுட் பெற்ற வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அயர்லாந்து வீரர் பால் ஸ்டிரிங் முதலிடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Monday, January 15, 2024, 6:00 [IST]
Other articles published on Jan 15, 2024
English summary
India vs afghanistan- Rohit sharma equals MS Dhoni record for Most T20I win as captain இந்திய டி20 அணி கேப்டன்களில் ரோகித் தான் டாப்.. தோனி சாதனை சமன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+