For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு நாட்டில் அதிக சிக்சர்கள்.. தோனி, கெயில் இல்லை.. ரோகித் சர்மா படைத்த மாஸ் சாதனை

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்கும் வீரர்களுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. சிக்ஸர் அடிக்கும் வீரர்களை தான் சாதாரண கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பது என்பது ஒரு அரிய கலை.

அதற்கு பலம் மட்டும் இருந்தால் போதாது. ஷார்டின் டைமிங் மிகவும் முக்கியம். பந்து வரும் நேரமும் பேட் படும் நேரமும் சரியாக அமைந்து போதிய சக்தி இருந்தால் மட்டுமே பந்து பௌண்டரியை தாண்டும். இது குறித்து கவாஸ்கர் அழகாக சொல்வார்.

India vs afghanistan - Rohit sharma hits most sixers in a country

சக்தி மட்டும் சிக்ஸர் அடிக்க தேவை என்றால் மல்யுத்த வீரர்களை தவிர வேறு யாராலும் சிக்சர் அடிக்க முடியாது என்று கூறுவார். அந்த வகையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஏற்கனவே ரோகித் சர்மா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற ஒரு தனி பட்டியலை பார்த்தால் அதிலும் ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒரு நாட்டில் 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு தான் சேரும். ரோஹித் சர்மா இந்தியாவில் மட்டும் 31 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 256 சிக்ஸர்களும், பிராண்டன் மெக்குல்லம் 230 சிக்சர்களும் அடித்திருக்கிறார்கள்.

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கெயில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் 228 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று மகேந்திர சிங் தோனி இந்தியாவில் மட்டும் 186 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று ரோகித் சர்மா முழு உறுப்பினர் நாடுகளில் கேப்டனாக அதிக ஆட்டநாயகன் விருது வென்ற பாபர் அசாம், இயன் மார்கனின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார். பாபரசம் 71 போட்டியில் ஆறு முறையும் இயன் மார்க்கன் 72 போட்டிகளில் ஆறுமுறையும் ஆட்டநாயகன் விருது வாங்கிய நிலையில் ரோகித் சர்மா இதனை 55 போட்டிகளில் சமன் செய்து இருக்கிறார்.

Story first published: Thursday, January 18, 2024, 13:24 [IST]
Other articles published on Jan 18, 2024
English summary
India vs afghanistan - Rohit sharma hits most sixers in a country ஒரு நாட்டில் அதிக சிக்சர்கள்.. தோனி, கெயில் இல்லை.. ரோகித் சர்மா படைத்த மாஸ் சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+