இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி ரோகித் சர்மா களம் இறங்கிய 150 ஆவது சர்வதேச டி 20 போட்டியாகும்.
ஆட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களுடன் பேசிய கேப்டன் ரோகித் சர்மா 150 போட்டிகளில் விளையாடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். இது மிக நீண்ட பயணமாக இருக்கிறது.இந்த பயணம் 2007 ஆம் ஆண்டு தொடங்கியது.

ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியாக எதிர் கொள்கிறேன். எங்களுக்கு டி20 போட்டியில் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அனைத்து வீரர்களுக்குமே இது கிளியர் மெசேஜாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்படி தான் நீங்கள் விளையாட வேண்டும். இது நினைத்து வீரர்கள் பெருமை கொள்ளலாம்.
ஒரு விஷயத்தைக் குறித்து பேசிக் கொண்டே இருப்பதை விட களத்திற்கு சென்று செய்து காட்டுவது பெருமையாக விஷயமாக நான் கருதுகிறேன். கடந்த இரண்டு டி20 போட்டிகளில் எங்களுக்கு தேவையான அனைத்து பாக்ஸ்களையும் நாங்கள் சரியாக டிக் செய்து விட்டோம். இரண்டு ஆண்டுகள் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.
ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 என பட்டையை கிளப்பி வருகிறார். அவரால் என்ன முடியும் என்பதை அனைவருக்குமே காட்டிவிட்டார். ஜெய்ஷ்வாலுக்கு பல திறமைகள் இருக்கிறது. அதேசமயம் பல சாட் ரேன்ஜ்களும் அவரிடம் இருக்கிறது. சிவம் துபே மிகவும் பெரிய மனிதன். மிகவும் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் சுழற் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ளக் கூடியவர்.
நாங்கள் அவருக்கு கொடுத்த பணியும் அதுதான். கடந்த இரண்டு டி20 போட்டிகளில் மிக முக்கியமான இன்னிங்ஸ்களை சிவம் துபே ஆடியிருக்கிறார்.ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவருமே தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.