எனக்குனே வருவீங்களா டா.. 2 பவுண்டரி அடித்தும் ரோகித் 0 ரன்.. நடுவர் செய்த தவறு.. கடுப்பான ரசிகர்கள்
பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகள் அடித்தும் அவருக்கு ரன் தரப்படாதது ரசிகர்களை கடுப்படைய செய்தது.14 மாதங்களுக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இதனால் மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா கண்டிப்பாக ஒரு ரன்னாவது எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரில் பரீத் அஹ்மத் வீச ரோகித் சர்மா அதனை பேட்டால் லெக் சைடு இல் அடித்தார். அது பவுண்டரிக்கு சென்றது எடுத்து தாம் இந்த ஆட்டத்தில் ரன்கள் அடித்து விட்டோம். தமது ரன் கணக்கை தொடங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் ரோகித் சர்மா இருந்தார்.
ஆனால் நடுவர் இதற்கு பவுண்டரி வழங்காமல் லெக் பைஸ் வழங்கினார். மேலும் இதனை ரோகித் சர்மா கவனிக்கவில்லை இதனை அடுத்து ஓவரின் கடைசி பந்தும் ரோகித் சர்மா அடித்தது அவருடைய இடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதற்கும் அவருக்கு நான் வழங்கப்படவில்லை.
இதனால் இரண்டு பவுண்டரிகள் அளித்தும் ரோகித் சர்மாவின் ஸ்கோர் ஜீரோவில் இருந்தது. இதை எடுத்து ஓவரின் இறுதியில் இதனை கவனித்த ரோகித் சர்மா நடுவர் விரேந்தர் சர்மாவிடம் முதலில் நான் அடித்த பவுண்டரி பேட்டில் பட்டு தான் சென்றது.
எதற்கு எனக்கு பவுண்டரி தரவில்லை என்று கேட்டார். எனினும் ரோகித் சர்மா அடுத்த ஓவரில் ஒரு ரன்னும் ஒரு பவுண்டரையும் அடித்து நடப்பு தொடரில் தனது ஸ்கோரிங் கணக்கை தொடங்கினார்.இந்த நிலையில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்தும் அதற்கு நடுவர் பைஸ் வழங்கியது அவரது ரசிகர்களை கடுப்படைய செய்தது. பலரும் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.


Click it and Unblock the Notifications