Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை.. இளம் வீரரை தேடி சென்ற டிராவிட்.. கடுப்பான ரசிகர்கள்

மொஹாலி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது ரசிகர்களை கடுப்படையச் செய்திருக்கிறது. மூன்று போட்டியில் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச டி20 தொடர் இது என்பதால் ரசிகர்கள் இந்த தொடரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அணிக்கு திரும்பியிருந்ததால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

India vs afghanistan- sanju samson did not get the chance in playing xi

இந்த நிலையில் விராட் கோலி முதல் டி20 போட்டியில் இருந்து விலகிய நிலையில் திலக் வர்மாவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தார். பழைய ஃபார்முக்கு திரும்பிய சஞ்சு சாம்சனுக்கு தான் டி20 கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்கப்படும் என ரசிகர்கள் நம்பினர். இதற்கு ஏற்றார் போல் டி20 இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.

இதன் காரணமாக சாம்சனுக்கு இன்றைய ஆட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 30 வயதான ஜித்தேஷ் ஷர்மாவுக்கு ரோகித் சர்மாவும் டிராவிட்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.சஞ்ச நல்ல பார்மில் இருக்கும் போது அவரை ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜித்தேஷ் சர்மாவை தான் சேர்க்கப் போகிறீர்கள் என்றால் சஞ்சு சாம்சனை எதிர்த்து அணியில் எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்திய அணியின் இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளத்திலும் பல கருத்துக்களை ரசிகர்கள் போட்டு தாக்கி வருகிறார்கள்.

Story first published: Thursday, January 11, 2024, 19:33 [IST]
Other articles published on Jan 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+