Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG - முக்கியமான கட்டத்தில் காலை வாரிய சிவம் துபே.. ஹர்திக் பாண்டியா ஹாப்பி அண்ணாச்சி!

பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே தொடர்ந்து இரண்டு முறை அரை சதம் அடித்து தனக்கென ஒரு பெயரை பெற்றார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சிவம் துபேவை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை குரலும் எழுத்தொடங்கியது.

இதனால் ஹர்திக் பாண்டியா தன்னுடைய இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. சிவம் துபேவை வைத்து ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு ரோகித் சர்மா செக் வைத்தார்.

India vs afghanistan - Shivam dube dismissed for 1 run in crucial moment

இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. ஜெய்ஸ்வால் 4 ரன்களில் வெளியேற இக்கட்டான நிலையில் சிவம் துபேவை களத்திற்கு வந்தார். இந்திய அணி இக்கட்டான நிலைகளில் இருக்கும் போது சிவம் துபே பெரிய ஸ்கோர் அடித்தால் டி20 உலக கோப்பையில் அவருடைய இடம் 100% உறுதியாகி விடும் என்று ரசிகர்களும் நம்பினர்.


ஆனால் சிவம் துபே முக்கியமான கட்டத்தில் வெறும் ஆறு பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இது சிவம் துபேக்கு ஏற்பட்ட பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவை ஓரம் கட்டுவதற்கு சிவம் துபேவை வைத்து காய் நகர்த்தலாம் என நினைத்த ரோகித் சர்மாவுக்கும் இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


சிவம் துபேவின் இந்த ஏமாற்றம் ஹர்திக் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இதேபோன்று சஞ்சு சாம்சனும் டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார். சிவம் துபே நன்றாக விளையாடுவதால் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை போட பிசிஐ முடிவு எடுத்திருந்தது. ஆனால் தற்போது முக்கியமான ஆட்டத்தில் அவர் ஒரு ரன்னில் வெளியேறி இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, January 17, 2024, 20:40 [IST]
Other articles published on Jan 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+