Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் எத்தனை வருசம் கோலி,ரோகித்துக்கு வாய்ப்பு தருவீங்க? 4 பேர் வாழ்க்கையில் விளையாடும் பிசிசிஐ

மும்பை : 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை நடைபெற்ற போது சச்சின், டிராவிட், கங்குலி போன்ற மூத்த வீரர்கள் எல்லாம் அதில் விளையாடுவதில்லை என முடிவெடுத்துக் கொண்டனர். இதன் மூலம் தான் யுவராஜ்,தோனி,யூசுப் பதான் போன்ற வீரர்கள் எல்லாம் டி20 உலக கோப்பையில் விளையாடி புதிய வரலாற்றையே உருவாக்கினர்.

இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு புதிய ஒரு வரலாற்றை உருவாக்க போகிறது என்று ரசிகர்கள் நம்பினர்.

India vs afghanistan t20 - 4 Indian Players should play instead of kohli and rohit

ஆனால் கடைசி கட்டத்தில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்த தொடரில் விளையாட போகிறார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பல இளம் வீரர்களின் வாய்ப்பு பறிபோய்விட்டது. இந்த நிலையில் கோலி, ரோகத்தை விட எந்த வீரர்களுக்கு வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ராகுல் திருப்பாதி.

ஐபிஎல் மற்றும் மற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். இந்திய அணியில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பையும் அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கூட 22 பந்துகளில் 44 ரன்கள், இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 16 பந்துகளில் 35 ரன்கள் ராகுல் திருப்பாதி அடித்திருக்கிறார்.

ஆனால் இவ்வளவு சிறப்பாக விளையாடிய அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தீபக் ஹூடா அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 57 பந்துகளில் 108 ரன்கள் குவித்து தன்னுடைய வருகையை பறைசாற்றினார்.
எனினும் காயம் மற்றும் 2023 ஐபிஎல் தொடரில் சொதப்பல் போன்ற காரணத்தால் தீபக் ஹூடா மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் சுழற் பந்து வீசக்கூடிய தீபக் ஹூடா கொஞ்சம் ஆதரவு அளித்து இருந்தால் நிச்சயம் நடுவரிசையில் நல்ல ஒரு அதிரடி வீரராக திகழ்வார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த நிதிஷ் ராணா. இவர் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மட்டும் டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 340 ரன்களுக்கு மேல் அடித்து வருகிறார்.

கடந்த சீசனில் 413 ரன்களை நிதிஷ் ரானா குவித்து இருந்தார். இதனால் நிதிஷ் ராணாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்திருக்கலாம். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயரையும் இந்திய அணியில் சேர்த்திருக்கலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு நல்ல ஒரு ஆல்ரவுண்டராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக அணியிலிருந்து இடத்தை இழந்தார். தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

Story first published: Monday, January 8, 2024, 21:10 [IST]
Other articles published on Jan 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+