IND vs AFG T20 - ஹாட் ஸ்டார் கிடையாது.. எந்த சேனல் மற்றும் ஒடிடியில் பார்ப்பது? எத்தனை மணிக்கு?
மும்பை : இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் 14 மாதங்களுக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய டி20 அணியில் விளையாடுகிறார்கள்.
இதனால் இயல்பாகவே இந்த போட்டி மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச டி20 தொடர் இது என்பதால் உலகக் கோப்பை அணியை தயார் செய்ய இந்த தொடர் மிகவும் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இந்திய அணியில் கே எல் ராகுல், ஜடேஜா, பும்ரா, சிராஜ் போன்ற வீரர்களுக்கு மட்டும் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் முழு பலத்தைக் கொண்டு இந்த தொடரில் விளையாடுகிறார்கள். முதல் டி20 போட்டி வரும் 11ஆம் தேதி மொஹலியிலும் ,இரண்டாவது t20 போட்டி வரும் 14ஆம் தேதி இந்தூரிலும் மூன்றாவது டி20 போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது. பொங்கல் விடுமுறை என்பதால் இந்த மூன்று போட்டிகளுமே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க முடியும். இந்த நிலையில் இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலில் ஒளிபரப்பாகும். ஓ டி டி யில் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஹாட் ஸ்டாருக்கான ஒளிபரப்பு உரிமை கடந்த ஆண்டுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஜியோ சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும். இந்த டி20 தொடர் குளிர்காலத்தில் நடைபெறுவதால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications