வாஷிங்டன் சுந்தருக்கு கிரீன் சிக்னல் தந்த பிசிசிஐ.. பும்ரா, ஹர்ஷித் ராணாவுக்கு காத்திருக்கும் சோதனை
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் முழு உடற்தகுதியுடன் தயாராகியுள்ளார். வரும் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தர் ஆடுவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி குறித்த இறுதி அறிக்கை நாளை (செப்டம்பர் 9) வெளியாக உள்ளது. பும்ரா இன்னும் தனது இறுதி உடற்தகுதி சோதனையை முடிக்கவில்லை. நாளை அவர் மேற்கொள்ளும் போட்டி ஒத்திகைச் சோதனைக்குப் பிறகே, ஆப்கானிஸ்தான் தொடரில் அவர் விளையாடுவது குறித்து பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கும்.
பும்ரா தவிர, இளம் வீரர்களான ஹர்ஷித் ரானா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் உடற்தகுதி சோதனை மற்றும் போட்டி ஒத்திகைகளை முடித்துவிட்டு பிசிசிஐ-யின் இறுதி அனுமதிக்குக் காத்துள்ளனர். இவர்களுக்கான இறுதி உடற்தகுதி அறிக்கையும் நாளை மாலை வெளியாக உள்ளது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முந்தைய தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்தது. அதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி தனது முழு பலத்தையும் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் இன்னும் குணமடையாததால், அவர் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆல் - ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்துவீச்சையும், பேட்டிங் வரிசையையும் பலப்படுத்தும் வகையில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா*, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா*.
(*உடற்தகுதியைப் பொறுத்து மாறும்)


Click it and Unblock the Notifications

