பெங்களூரு: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இரண்டு முறை சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்ட பிறகு இந்தியா வெற்றி பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து இரண்டு சூப்பர் ஓவர்கள் விளையாடி வெற்றி பெற்றது.
இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் அபார ஆட்டத்தால் 212 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இந்தியா எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர் முடிவில் 212 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இது போன்ற போட்டிகளில் ஒரு ரன் தடுத்து நிறுத்தப்பட்டாலே மிகப்பெரிய தாக்கத்தை அது போட்டியில் ஏற்படுத்தும். இந்த நிலையில் சிக்சருக்கு சென்ற பந்தை விராட் கோலி தடுத்து நிறுத்தியது, இந்த போட்டியில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி 16.4வது ஓவரில் 165 ரன்கள் விக்கெட் எடுத்து விளையாடி வந்தது. 20 பந்துக்கு 48 ரன்கள் தேவைப்பட்டபோது ஆப்கானிஸ்தான் வீரர் ஜன்னத் அடித்த பந்து சிக்ஸர் நோக்கி சென்றது. அப்போது சிக்ஸர் லைனில் நின்று கொண்டிருந்த விராட் கோலி பந்து சிக்ஸர் செல்லாமல் அதை தாவி தடுத்து விட்டார்.
பந்தை பிடிக்க முடியவில்லை என்றாலும் அதை சிக்ஸர்க்கு சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் விராட் கோலி இவ்வாறு செய்தார்.
அது போட்டியின் முடிவில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தான் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி பெரிய அளவில் பேட்டிங்கில் எதுவும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் கோல்டன் டக் ஆனார்.எனினும் பில்டிங்கில் முக்கிய கட்டத்தில் சிக்ஸரை தடுத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். இதேபோன்று சூப்பர் ஓவரில் விராட் கோலி அபாரமாக ரன் நூற்று ஒன்றையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.