Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

27 பந்துகளில் அரைசதம்.. ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை.. கில்லுக்கு இனி இடமில்லை?

இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.

இதில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ரோகித் சர்மா டி20 அணியில் விளையாடப் போகிறேன் என அறிவித்திருக்கிறார். இதனால் அவர் இன்னும் 10 முறை டக் அவுட் ஆனாலும் ரோகித் சர்மா தான் தொடக்க வீரர் என்பதில் சந்தேகமே இல்லை.

India vs Afghanistan - Yashasvi jaiswal scored 50 runs from 27 balls

இதனால் அவருக்கு துணையாக யார் இருக்கப் போகிறார் என்று தான் தற்போது கேள்வி எழுந்துள்ளது. முதல் டி20 போட்டியில் அந்த வாய்ப்பு கில்லுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம் போல் அதனை சொதப்பிவிட்டார். இதை அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் கில் அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் களம் இறங்கினார்.

இம்முறையும் ரோகித் டக் அவுட் ஆகி வெளியேற ஜெய்ஸ்வால் ஒரு முனையில் இருந்து அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். விக்கெட் போய்விட்டது என்று கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஜெய்ஸ்வால் தன்னுடைய அபாரமான அச்சமின்றி ஷார்ட்டுகளை ஆடி ரன்களை சேர்த்தார். எப்படி போட்டாலும் இந்த பையன் அடிக்கிறான் டா என்பது போல் ஆப்கானிஸ்தான் வீரர்களை தடுமாற தொடங்கி விட்டனர்.

கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் பௌண்டரி சிக்ஸராக ஜெயஸ்வால் மாற்றினார். ஒரு கட்டத்திற்கு மேல் ஜெயிஸ்வால் அதிரடிகை கொஞ்சம் கூட ஆப்கானிஸ்தான் வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் மூலம் 27 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்தார். இதில் நான்கு பவுண்டர்களும் நான்கு இமாலய சித்தர்களும் அடங்கும். இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிவேக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் தற்போது அதிரடியாக விளையாடுவதால் தொடக்க வீரர் வாய்ப்பு அவருக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தன்னுடைய இடத்தை கில் இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.34 பந்துகளை எதிர்கொண்ட ஜெயஸ்வால் 68 ரன்கள் சேர்த்தார் இதில் ஐந்து பௌண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.

Story first published: Sunday, January 14, 2024, 21:55 [IST]
Other articles published on Jan 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+