Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்!! சூப்பர் ஸ்கூப் ஷாட் அடித்த ரோஹித் சர்மா.. எதிரில் நின்று ரசித்த கோலி!

ஹைதராபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த ஸ்கூப் ஷாட் ஒன்றை எதிரில் நின்று பார்த்து ரசித்தார் கோலி.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 236 ரன்கள் சேர்த்தது.

பிசிசிஐ வீடியோ

பிசிசிஐ வீடியோ

அடுத்து இந்தியா சேஸிங் செய்த போது, ரோஹித் சர்மா - கோலி இணைந்து பேட்டிங் செய்தனர். அப்போது தான் ஸ்கூப் ஷாட் அடித்தார் ரோஹித். அந்த ஸ்கூப் ஷாட் வீடியோவை பிசிசிஐ தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ரோஹித் அடித்த ஷாட்

ரோஹித் அடித்த ஷாட்

ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தை வீசினார் ஆஸி வீரர் பெஹ்ரண்டாப். ரோஹித் அந்த பந்தை அடிக்க முன்பே தயாராகி, விலகி வந்து ஸ்கூப் ஷாட் அடித்தார். அந்த பந்து பவுண்டரியை நோக்கி சென்றது.

கோலி - ரோஹித் இணை

கோலி - ரோஹித் இணை

அப்போது எதிரில் இருந்த கேப்டன் கோலி, புன்னகையுடன் இந்த ஷாட்டை பார்த்து ரசித்தார். ரோஹித் - கோலி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் 37, கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்கூப் ஷாட் வளர்ச்சி

ஸ்கூப் ஷாட் வளர்ச்சி

ஸ்கூப் ஷாட் நவீன கால கிரிக்கெட்டின் கொடை. டி20யின் வரவால் வளர்ந்த கடினமான இந்த வகை ஷாட்டை அதிரடி வீரர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ரோஹித் சர்மா இந்த போட்டியில் அதிரடியாக ஆடாவிட்டாலும், இடையே இந்த ஸ்கூப் ஷாட்டை முயற்சி செய்து வெற்றி கண்டார்.

Story first published: Sunday, March 3, 2019, 9:40 [IST]
Other articles published on Mar 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+