Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவில் இதுவரை செய்யாததை செய்து காட்டிய ரோஹித் சர்மா!! என்னன்னு மட்டும் கேட்டுறாதீங்க!

நாக்பூர் : ரோஹித் சர்மா இந்திய மண்ணில் இதுவரை செய்யாத ஒரு விஷயத்தை நாக்பூர் ஒருநாள் போட்டியில் செய்து காட்டியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 6 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதில் என்ன செய்து விட்டார் ரோஹித்? அந்த டக் அவுட் தான் விஷயமே!

ரோஹித் சர்மா ஆடியவை

ரோஹித் சர்மா ஆடியவை

ரோஹித் சர்மா ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியுடன் சேர்த்து இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் இந்திய மண்ணில் ஆடியவை 56 போட்டிகள் ஆகும்.

முதல் டக் அவுட்

முதல் டக் அவுட்

முதல் 55 போட்டிகள் வரை இந்திய மண்ணில் ரோஹித் சர்மா ஒரு முறை கூட டக் அவுட் ஆனதே இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக இந்திய மண்ணில் டக் அவுட் ஆகி உள்ளார் ரோஹித் சர்மா.

தேவையற்ற ரெக்கார்டு

தேவையற்ற ரெக்கார்டு

வெளிநாடுகளில் ரோஹித் சர்மா 12 முறை டக் அவுட் ஆகி உள்ளார். இந்த ஒரு டக் அவுட்டால் ரோஹித் திறமையை குறைத்து எடை போட்டு விட முடியாது என்றாலும், ரோஹித் தேவையற்ற ரெக்கார்டை செய்துள்ளார்.

ரோஹித் ஏமாற்றம்

ரோஹித் ஏமாற்றம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிதான ஆட்டம் ஆடி 37 ரன்கள் மட்டுமே சேர்த்த ரோஹித், இரண்டாம் போட்டியில் அதிரடி காட்டுவார் என நினைத்த நிலையில், டக் அவுட் ஆனார்.

தவானும் இதே தான்!

தவானும் இதே தான்!

முதல் போட்டியில் மற்றொரு துவக்க வீரர் தவான் டக் அவுட் ஆனார். அவர் இரண்டாம் போட்டியில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். துவக்க வீரர்கள் இருவரும் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் கே.எல்.ராகுலை துவக்க வீரராக இறக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, March 5, 2019, 15:06 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+