Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது கோலி தனியா எடுத்த முடிவு இல்லையாம்.. தோனி, ரோஹித்தோட பேசி எடுத்த முடிவாம்!

நாக்பூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து கடைசி ஓவர் வரை சென்று, இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது.

இந்த போட்டியில், 49வது ஓவர் வரை ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்த விஜய் ஷங்கர் கடைசி ஓவரை வீசினார். எப்போதும் கோலி, இது போல அதிரடி முடிவை எல்லாம் எடுக்க மாட்டாரே? இப்ப மட்டும் எப்படி? என்ற சந்தேகம் இருந்தது.

Also Read | அடப்பாவமே!! டாஸில் வெற்றி.. போட்டியில் தோல்வி.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஆஸி. அணி!

கலந்து பேசினார்

கலந்து பேசினார்

அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. கேப்டன் கோலி, அந்த முடிவை முன்னாள் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கலந்து பேசி தான் எடுத்துள்ளார். அப்படி என்ன பேசினார்கள்?

ஓவர்கள் குறைவு

ஓவர்கள் குறைவு

எப்போதும் கடைசி ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது தான் பாதுகாப்பு என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் எழுதப்படாத விதியாக உள்ளது. இந்திய அணிக்கு நேற்று கடைசி பத்து ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளரின் ஓவர்கள் குறைவாகவே இருந்தது.

ஓவர்கள் குழப்பம்

ஓவர்கள் குழப்பம்

இந்திய அணியில் ஷமி, பும்ரா இருவருக்கும் சேர்த்து 6 ஓவர்கள் மட்டுமே இருக்க மூன்று ஓவர்கள் வரை குல்தீப் வீசி 45வது ஓவருடன் தன் 10 ஓவர்களை முடித்துக் கொண்டார். இதனால், கடைசி ஐந்து ஓவர்களில் 4 ஓவர்கள் வரை ஷமி, பும்ரா வீசுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

ஜாதவ் அல்லது விஜய் ஷங்கர்

ஜாதவ் அல்லது விஜய் ஷங்கர்

மீதமுள்ள ஒரு ஓவரை யார் வீசுவது? எந்த ஓவரில் அவரை வீசச் செய்வது? இது தான் கேப்டன் கோலி முன்பு இருந்த கேள்வி. அப்போது இந்திய அணிக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. ஒன்று 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த கேதார் ஜாதவ். அடுத்தது, ஒரே ஒரு ஓவர் வீசி 13 ரன்கள் கொடுத்திருந்த விஜய் ஷங்கர்.

முடிவு என்ன?

முடிவு என்ன?

இதை தான் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் பேசி இருக்கிறார் கோலி. முடிவில் 46 முதல் 49 வரை நான்கு ஓவர்களை ஷமி, பும்ரா வீசி அழுத்தம் கொடுக்கவும், கடைசி ஓவரை விஜய் ஷங்கர் வீசச் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

விஜய் அசத்தல் பந்துவீச்சு

விஜய் அசத்தல் பந்துவீச்சு

அதன் படியே, கடைசி ஓவரில் 11 ரன்கள் கொடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று விடும் என்ற நிலையில், விஜய் ஷங்கர் மூன்று பந்துகளில் 2 விக்கெட்கள் எடுத்து 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

Story first published: Wednesday, March 6, 2019, 16:55 [IST]
Other articles published on Mar 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+