For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடிச்சது 14 ரன்.. ஆனா தோனியுடன் சாதனை லிஸ்டில் சேர்ந்த ரோஹித் சர்மா!

ராஞ்சி : மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. ரோஹித் சர்மா கடந்த போட்டியில் டக்-அவுட் ஆன நிலையில், இந்த போட்டியில் 14 ரன்கள் மட்டுமே அடித்தார்.

தோனி செய்த சாதனை

தோனி செய்த சாதனை

14 ரன்கள் மட்டுமே அடித்த ரோஹித், குறிப்பிட்ட சாதனைப் பட்டியலில் தோனியுடன் இணைந்துள்ளார். தோனி முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸர்கள் அடித்தார். அதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

ரோஹித் இணைந்தார்

ரோஹித் இணைந்தார்

அதே பட்டியலில், இரண்டு போட்டிகள் கழித்து ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். மூன்றாவது போட்டிக்கு முன் ரோஹித் சர்மா 349 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் அடித்த 14 ரன்களில், 1 சிக்ஸர் அடித்து. தன் 350வது சிக்ஸரை நிறைவு செய்தார்.

350+ சிக்ஸர்கள் பட்டியல்

350+ சிக்ஸர்கள் பட்டியல்

இதன் மூலம், ஆறாவது வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் 350+ சிக்ஸர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் (517), அப்ரிடி (476), பிரென்டன் மெக்குல்லம் (398), தோனி (353), சனத் ஜெயசூர்யா (352), ரோஹித் சர்மா (350) ஆகிய வீரர்கள் உள்ளனர்.

குறைந்த போட்டிகள்

குறைந்த போட்டிகள்

தோனிக்கு பின்னே இருந்தாலும், அவரை விட குறைந்த போட்டிகளிலேயே ரோஹித் சர்மா அதிக சிக்ஸர்கள் அடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா அடுத்த போட்டியிலாவது அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

Story first published: Friday, March 8, 2019, 22:00 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
India vs Australia 3rd ODI : Rohit Sharma joins with Dhoni in prestigious Six club
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+