Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”நீயெல்லாம் குழந்தை.. எவ்வளவு பேரை பார்த்திருப்பேன்” இந்திய அணியை பொளந்த மேக்ஸ்வெல்.. அசத்தல் மீம்ஸ்

கவுகாத்தி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டி20 போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் கடைசி ஓவரை மேக்ஸ்வெல் கைகளில் கொடுத்தார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணி தரப்பில் 30 ரன்கள் விளாசப்பட்டது. அதேபோல் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19வது ஓவரை அக்சர் படேலிடம் கொடுத்தார். அந்த ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டது. இதனை தமிழ்ப் படம் 2ஆம் பாகத்தில் போட்டிப்போட்டு சதீஷ் மற்றும் சிவா இருவரில் கேவலமாக டான்ஸ் ஆடுவது யார் என்று போட்டிப்போடுவது போல் வேட் மற்றும் சூர்யகுமார் ஆகியோரில் யார் மோசமாக கேப்டன்சி செய்வது என்று போட்டி நடந்ததாக உருவாக்கப்பட்ட மீம் குபீர் ரகம்.

INDIA vs AUSTRALIA 3rd T20: Fantastic Memes from Social Media after Australia beat India by 5 wickets at Guwahati

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதன்பின் ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதமடித்து, ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்ததையே மறக்கும் அளவிற்கு இன்னிங்ஸை ஆடினார். இதனை புதுப்பேட்டை படத்தில் அன்பு கதாபாத்திரம் தனுஷிடம், "நீ குழந்தை.. எவ்ளோ பார்த்திருப்பேன் நான்" என்று சொல்லுவார். அதனை அப்படி மேக்ஸ்வெல் கூறுவதாக உருவாக்கப்பட்ட மீம் மிரட்டல்.

INDIA vs AUSTRALIA 3rd T20: Fantastic Memes from Social Media after Australia beat India by 5 wickets at Guwahati

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவரில் 87 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது களத்தில் இருந்த மேக்ஸ்வெல் தனியாளாக சிக்ஸ், பவுண்டரியை விளாசி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதனை விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைவார். அப்போது ஒருவர், இதுதான் வேதா.. என்று கூறுவார். அதுபோல் இதுதான் மேக்ஸ்வெல் என்று இந்திய ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

INDIA vs AUSTRALIA 3rd T20: Fantastic Memes from Social Media after Australia beat India by 5 wickets at Guwahati

ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்ட எந்த வீரரும் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை குவிக்காத நிலையில், தனியாளாக ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். சிறப்பாக ஆடிய அவர் 57 பந்துகளில் 123 ரன்களை விளாசினார். இதனை சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் ரங்கன் வாத்தியாரிடம், ராமன் கூட கபிலன் ஸ்பேரிங் போட்டுகிட்டு இருக்கான் என்பார்.. அதற்கு கபிலனா என்று ஆச்சரியம் ஏற்படும். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சம்பவத்தை நிகழ்த்தியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல் ரகம்.

Story first published: Wednesday, November 29, 2023, 11:11 [IST]
Other articles published on Nov 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+