Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லையே இல்லையே.. ஆஸி. உடனான 3வது டெஸ்ட்.. திடீரென வேறு மைதானத்திற்கு மாற்றம்- நல்லதா?கெட்டதா

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான மைதானத்தை கடைசி நேரத்தில் பிசிசிஐ மாற்றியுள்ளது. பல்வேறு குழப்பங்கள் இருந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கியது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த முறை எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி முனைப்புடன் உள்ளது.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியை விட 3வது போட்டி குறித்த பேச்சுக்கள் தான் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த போட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் இந்த மைதானம் சர்வதேச போட்டியை நடத்துவதற்கு தற்போது தகுதியுடன் இல்லை எனக்கூறி அங்கிருந்து மாற்றுகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதால், பல்வேறு மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான் தரம்சாலா மைதானத்தின் அனைத்து பணிகளும் நடந்தன. ஆனால் மைதானத்தின் அவுட் ஃபீல்டில் புற்கள் இன்னும் சரிவர ஒட்டாமலேயே உள்ளன. அதிகளவில் மழையும், பனிப்பொழிவும் இருப்பதால் புற்கள் பிரச்சினையாக உள்ளது. இது பவுண்டரிகள் செல்வதற்கு சிரமமாக இருக்கும். எனவே அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடந்து வந்தது.

புது மைதானம் அறிவிப்பு

புது மைதானம் அறிவிப்பு

இந்த சூழலில் தான் இந்த போட்டியை இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திற்கு மாற்றுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதலில் பெங்களூரு சின்னசாமி மைதானம் அல்லது விசாகப்பட்டினம் மைதானத்திற்கு தான் மாற்றுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் இந்தூருக்கு கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் தான் இங்கு ரஞ்சிக்கோப்பை அரையிறுதி போட்டிகள் நடந்ததால் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த தயார் நிலையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மைதானத்தின் ரெக்கார்ட்

மைதானத்தின் ரெக்கார்ட்

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் நடந்தது. இந்த போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 493 ரன்கள் அடித்து டிக்ளர் செய்திருந்தது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு கண்டம் இருப்பது உறுதிதான்.

Story first published: Monday, February 13, 2023, 15:22 [IST]
Other articles published on Feb 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+