Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் கிரிக்கெட் வாழ்வில் இதுதான் மோசமான நாள்.. இதுவரை இத்தனை ரன்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை

மெல்போர்ன்: பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிக மோசமான இரண்டு விஷயங்கள் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் நடந்து இருக்கிறது. சுமார் 4 ஆண்டுகள் 4483 பந்துகளுக்கு பிறகு சாம் கோன்ஸ்டாஸ் பும்ராவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சிக்ஸ் அடித்தார்.

ஆனால், அதைவிட இரண்டு மோசமான விஷயங்கள் நடந்து இருக்கிறது. இந்த இன்னிங்ஸில் மட்டும் மொத்தம் நான்கு சிக்ஸர்களை விட்டுக் கொடுத்தார் பும்ரா. அவரது டெஸ்ட் வாழ்வில் இதுவரை ஒரே இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸ்க்கு மேல் விட்டுக் கொடுத்ததே இல்லை. ஆனால், மெல்போர்ன் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் நான்கு சிக்ஸர்களை விட்டுக் கொடுத்தார்.

ind vs aus jasprit bumrah india vs australia test match vs

சாம் கோன்ஸ்டாஸ் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஒரு சிக்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸ் அடித்தனர். 2018 இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் பும்ராவுக்கு எதிராக இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார்.

அதுவே ஒரே இன்னிங்ஸில் பும்ராவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை ஆகும். அந்த சாதனையையும் மெல்போர்ன் போட்டியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பும்ரா 28.4 ஓவர்கள் பந்து வீசி 99 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பும்ரா 4 விக்கெட் வீழ்த்தியது இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தாலும், தனது கிரிக்கெட் வாழ்விலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். அவர் இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 90 ரன்களுக்கும் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்ததில்லை. முதல் முறையாக 90 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து இருக்கிறார்.

இதற்கு முன் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2020இல் 88 ரன்களும், 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 85 ரன்களும் விட்டுக் கொடுத்திருக்கிறார். அவையே பும்ரா விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

பும்ரா மெல்போர்ன் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த போதும் நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி தொடரில் அவர் இதுவரை 25 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 28, 2024, 8:09 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+