For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் செய்த மெகா சொதப்பல்.. விக்கெட் எடுக்கும் பவுலரை அலைய விட்டது தவறு.. விளாசும் ரசிகர்கள்

மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகப்பெரிய சொதப்பல் ஒன்றை செய்தார். நான்காவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தரை சேர்த்த நிலையிலும் அவருக்கு முதல் 52 ஓவர்கள் வரை பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து வருகிறார்.

ind vs aus rohit sharma india vs australia test match vs

இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் வரிசையாக அரை சதம் அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், முதல் 52 ஓவர்கள் வரை வாஷிங்டன் சுந்தருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா தான் வீழ்த்தினார். சுழற் பந்துவீச்சாளரான ஜடேஜாவுக்கு விக்கெட் கிடைத்ததால் அடுத்து மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான சுந்தரை கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச அழைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், வாஷிங்டன் சுந்தருக்கு உடனடியாக பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மாற்றி, மாற்றி பந்து வீசினர். ஒரு கட்டத்தில் 154 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்து 237 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் ரன் குவித்தது. மார்னஸ் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் திணறினர். 52 வது ஓவரின் முடிவில் தான் வாஷிங்டன் சுந்தரை பந்து வீச அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. வாஷிங்டன் சுந்தர் பந்து வீச துவங்கிய பின் சில ஓவர்களில் மார்னஸ் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அதன் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்த 9 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்களை வரிசையாக இழந்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது வாஷிங்டன் சுந்தர்தான். அவரை ஆட்டத்தின் முதல் பகுதியிலேயே பயன்படுத்தி இருந்தால் ஆஸ்திரேலிய அணியை ஓரளவு கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா அதை செய்யவில்லை.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்கள் எடுத்தும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 12 ஓவர்கள் விசிய வாஷிங்டன் சுந்தர் அதில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Thursday, December 26, 2024, 13:51 [IST]
Other articles published on Dec 26, 2024
English summary
India vs Australia 4th Test: Rohit Sharma didn't used Washington Sundar till 52nd over
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+