Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரதமர் மோடி பங்கேற்ற அகமதாபாத் டெஸ்ட்.. ஆரம்பமே இந்தியாவுக்கு ஷாக்..ரோகித் செய்த மாற்றம்

அகமதாபாத் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியும் பங்கேற்றனர்.

இந்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன்களின் தொப்பியை இரு நாட்டு பிரதமர்களும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித்துக்கும் வழங்கினார்கள்.

இந்த டெஸ்ட் போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

ஆடுகளம்

ஆடுகளம்

அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். இந்த தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களிலேயே இது தான் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் முயன்றால் விக்கெட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

டாஸ்

டாஸ்

இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் பேச்சு

ரோகித் பேச்சு

இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்களும் பேட்டிங் செய்ய தான் திட்டமிட்டோம். டாசை இழந்துவிட்டதால் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துவிட்டது. தோல்விக்கு பிறகு எங்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. ஒரு அணியாக என்ன தவறு செய்தோம் என்பதை மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ்

Story first published: Thursday, March 9, 2023, 9:42 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+