For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: 5வது டெஸ்ட்டில் இந்திய அணி ஜெயிக்க முடியுமா? என்ன செய்தால் வெற்றி பெறலாம்?

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி வரும் இந்திய அணி 141 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து உள்ளது.

இந்த போட்டியில் இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பார்க்கலாம். சிட்னியில் நடைபெற்று வரும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 181 ரன்களும் எடுத்தன.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இந்த போட்டி நடைபெற்று வரும் பிட்ச்சில் ரன் குவிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 145 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இந்தப் போட்டி நடைபெற்று வரும் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும் ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் இரண்டாவது இன்னிங்ஸில் சற்று கவனமாக ஆடி போட்டியில் வெல்வதில் மிகக் குறியாக இருப்பார்கள். எனவே, இந்திய அணி நிச்சயமாக 250 ரன்கள் அல்லது அதற்கும் மேல் எடுத்தால் ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்த முடியும்.

அதற்கு இந்திய அணி இன்னும் 105 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆறு விக்கெட் வீழ்ந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தால் அதன் பின் பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே பேட்டிங் ஆட முடியும்.

அவர்களால் பெரிதாக ரன் சேர்க்க முடியாது. எனவே, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் விக்கெட் இழக்காமல் கவனமாக ஆட வேண்டும். இவர்கள் இருவரில் ஒருவர் நிதானமாக ஆட, மற்றவர் வேகமாக ரன் குவிக்க முயல வேண்டும். அதன் மூலம் இந்திய அணி 100 ரன்களுக்கும் மேல் சேர்க்க வேண்டும்.

இதுதான் இந்திய அணியின் முதல் திட்டமாக இருக்க வேண்டும். 250 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்த பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பந்து வீச்சிலும், ஃபீல்டிங்கிலும் அழுத்தம் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள்.

Bumrah-இனி வாய்ப்பு கிடையாது! அடுத்த பெரிய தொடர் தான் முக்கியம்- சிட்னி டெஸ்டை பலி கொடுக்கும் BCCI

பும்ராவுக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி முக்கிய வேகப்பந்துவீச்சாளரான பும்ரா இல்லாமல் ஆடவும் தயாராக இருக்க வேண்டும். பும்ராவால் பந்து வீச முடியாமல் போனாலும் இந்திய அணி இந்த போட்டியில் வெல்வதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து அச்சுறுத்துவதன் மூலம் மட்டுமே அதை செய்ய முடியும்.

Story first published: Saturday, January 4, 2025, 16:39 [IST]
Other articles published on Jan 4, 2025
English summary
India vs Australia 5th Test: How can India win fifth test after losing six wickets?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+