Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Bumrah-இனி வாய்ப்பு கிடையாது! அடுத்த பெரிய தொடர் தான் முக்கியம்- சிட்னி டெஸ்டை பலி கொடுக்கும் BCCI

சிட்னி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இரண்டு நாட்கள் தான் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போட்டி கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமனாகிவிடும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.

ind vs aus jasprit bumrah rohit sharma virat kohli vs

ஆனால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றுவதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிடும். இந்த சூழலில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 185 ரன்கள் ஆட்டம் இழக்க இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பெரிய ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் போலந்து மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ், அபாரமாக பந்து வீசி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், ராகுல் 13 ரன்களிலும்,கில் 13 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 6 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற இந்த நிலையில் ரிஷப் பண்ட் மட்டும் 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து இருக்கிறது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்தியாவுக்கு கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருக்க இந்தியா குறைந்தபட்சம் 180 முதல் 200 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டினால் தொடரை வென்று விடும். இல்லை இந்தியா 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியா வென்று விடும். இந்த சூழலில் தற்போது முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பும்ரா முதல் இன்னிங்சில் பத்து ஓவர் தான் வீசினார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்தார்.

ஸ்கேனில் பெரிய பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. எனினும் தொடர்ந்து பும்ரா பந்து வீசினால் அது அவருக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும். ஏனென்றால் பும்ரா ஏற்கனவே முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். இதனால் பும்ராவுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை மிகவும் பாதிக்க வைக்கும்.இதன் காரணமாக பும்ராவை இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச பிசிசிஐ அனுமதிக்காது என தெரிகிறது. இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியை சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பலி கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

Story first published: Saturday, January 4, 2025, 18:21 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+