Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னரை வீழ்த்திய முகமது ஷமி.. அதிர்ந்துபோன அகமதாபாத் மைதானம்.. துள்ளிக்குதித்த இந்திய ரசிகர்கள்!

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

INDIA vs AUSTRALIA: After Mohammad Shami dismissed David Warner, Ahmedabad Crowd finally had their chance to Payback Pat Cummins


அதிகபட்சமாக இந்திய அணியின் கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி தரப்பில் கடைசி 40 ஓவர்களில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. அதில் 11 முதல் 39 ஓவர்கள் வரை ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

அதேபோல் ஆஸ்திரேலியா வீரர்கள் ஃபீல்டிங்கில் அவ்வளவு எளிதாக எந்த பவுண்டரியையும் விடவில்லை. இதன் காரணமாகவே 260 ரன்கள் வரை செல்ல வேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 240 ரன்களாக குறைந்தது. இதன்பின் 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் கூட்டணி களமிறங்கியது.

இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே டேவிட் வார்னர் அடித்த பந்து ஸ்லிப் திசை நோக்கி சென்றது. ஆனால் அந்த கேட்சை பிடிக்காமல் விராட் கோலி கோட்டைவிட்டார். இதன்பின் முதல் ஓவரில் மட்டும் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் இரண்டு ஓவரை வீச சிராஜ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா முகமது ஷமி கைகளில் பந்தை கொடுத்தார்.

அவர் வீசிய முதல் பந்து ஒய்டாக, பின்னர் மீண்டும் வீசிய பந்தில் டேவிட் வார்னர் பேட்டில் பட்டு நேராக ஸ்லிப் திசையில் நின்ற விராட் கோலியின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 16 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது சைலண்ட் மோடில் இருந்த அகமதாபாத் ரசிகர்கள், முதல் விக்கெட்டை வீழ்த்திய பின் உயிர்ப்புடன் கரகோஷம் எழுப்பினர். இதனால் அகமதாபாத் மைதானமே அதிர்ந்தது.

Story first published: Sunday, November 19, 2023, 19:04 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+