Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்டில் அஸ்வின், ரோஹித் இல்லை.. மாற்றாக வரும் அந்த இரண்டு வீரர்கள் யார்?

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டி பெர்த் மைதானத்தில் டிசம்பர் 14 அன்று நடைபெற உள்ளது.

அந்த போட்டிக்கான உத்தேச 13 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அஸ்வின், ரோஹித் பெயர் இடம் பெறவில்லை.

இந்திய அணியில் இவர்கள் இல்லை

இந்திய அணியில் இவர்கள் இல்லை

ரோஹித், அஸ்வின் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் அணியில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. முதல் டெஸ்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித்துக்கு முதுகு வலி, அஸ்வினுக்கு கீழ் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்கள் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை.

ரோஹித்தால் என்ன தாக்கம்?

ரோஹித்தால் என்ன தாக்கம்?

ரோஹித் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி தடுமாறியபோது ஓரளவு நிலைத்து ஆடி 37 ரன்கள் அடித்தார். எனினும், அப்போது தேவையில்லாமல் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்ஸிலும் சொற்ப ரன்களில் வெளியேறினார். அதனால், இரண்டாம் டெஸ்டில் ரோஹித் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தெரியாமலே இருந்தது. எனவே, அவரது நீக்கம் இப்போதைக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஹனுமா விஹாரி சரியான தீர்வா?

ஹனுமா விஹாரி சரியான தீர்வா?

ரோஹித்துக்கு மாற்றாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹனுமா பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் என்ற கூடுதல் தகுதியுடன் இருக்கிறார். எனினும், அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லை. ஹனுமா விஹாரி ரோஹித்துக்கு நேரிடையான தீர்வு இல்லை என்றாலும், அணிக்கு நிச்சயம் உதவுவார்.

அஸ்வின் தாக்கம் என்ன?

அஸ்வின் தாக்கம் என்ன?

அஸ்வின் முதல் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். மொத்தம் ஆறு விக்கெட்கள் எடுத்த அஸ்வின், ஓவருக்கு 2 ரன்களுக்கும் கீழே தான் கொடுத்தார். இரண்டாவது டெஸ்டில் அஸ்வின் ஆடி இருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தியிருப்பார். இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகளவில் அஸ்வினிடம் விக்கெட்டை பறி கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவீந்திர ஜடேஜா எப்படி?

ரவீந்திர ஜடேஜா எப்படி?

அஸ்வினுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ஜடேஜா. அஸ்வினை காட்டிலும் ஜடேஜா கடந்த சில மாதங்களில் பேட்டிங்கில் ரன் குவித்து வருகிறார். அது மிகப் பெரிய அளவில் ஜடேஜாவை முன்னிறுத்திக் காட்டுகிறது. அதே சமயம், பந்துவீச்சில் சில சமயம் சொதப்பவும் செய்வார். எல்லா போட்டியிலும் அப்படி இருக்க மாட்டார் என்றாலும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் சாதிப்பாரா? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

இந்திய அணிக்கு பாதகமா?

இந்திய அணிக்கு பாதகமா?

ரோஹித், அஸ்வின் இல்லாத இந்திய அணி, ஹனுமா, ஜடேஜாவை சேர்த்துக் கொண்டு பலமான அணியாகவே காட்சி தருகிறது. ஹனுமா விஹாரியின் அனுபவமின்மை ஒன்று மட்டுமே அணிக்கு உள்ள பெரிய பாதகம்.

Story first published: Thursday, December 13, 2018, 16:36 [IST]
Other articles published on Dec 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+