Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் ஆஸி. முன்னாள் வீரர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கெர்ரி, இந்திய வீரர்களை இழிவு படுத்தும் பேச்சுக்களை பேசி வருகிறார்.

இந்த முறை புஜாராவின் பெயரை வைத்து கேலி செய்துள்ளார். இதற்கு இந்திய ரசிகர்கள் இணையத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

கான்டீன் ஊழியர்கள் பேச்சு

கான்டீன் ஊழியர்கள் பேச்சு

கெர்ரி முதலில் மாயன்க் அகர்வாலையும், இந்திய உள்ளூர் போட்டிகளின் தரத்தையும் இழிவு படுத்தி பேசி இருந்தார். மாயன்க் உள்ளுர் போட்டிகளில் கான்டீன் ஊழியர்களுடன் ஆடி 300 ரன்கள் அடித்திருப்பார் எனக் கூறி கிண்டல் செய்து சிரித்தார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, தான் எந்த உள் அர்த்தத்திலும் அவ்வாறு கூறவில்லை என விளக்கம் அளித்தார். அப்போதே இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பலர் அவரை வர்ணனையாளர் பணியில் இருந்து நீக்குமாறு கூறி இருந்தனர்.

புஜாரா பற்றி பேச்சு

புஜாரா பற்றி பேச்சு

மூன்றாவது டெஸ்டின் நான்காம் நாள், மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தொடங்கி விட்டார் கெர்ரி. இந்த முறை புஜாராவை குறிப்பிடும் போது, "சத்தேஸ்வர் ஜடேஜா" என குறிப்பிட்டார். புஜாராவின் முழு பெயரில் முதல் பாதியோடு ஜடேஜா பெயரை இணைத்து இவ்வாறு கூறினார்.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

இதை அவர் வேண்டுமென்றே இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் என இணையத்தில் இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், இந்திய வீரர்களின் பெயர்களை அவர் சரியாக உச்சரிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

Story first published: Saturday, December 29, 2018, 14:47 [IST]
Other articles published on Dec 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+