Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் பற்றிய பதிவு.. வன்மத்தை கக்கிய ஆஸ்திரேலியா வீரர்கள்.. நல்லவன் மாதிரி நடிச்சீங்களேடா!

சிட்னி: இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் தான் தந்தை என்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீமிற்கு கேப்டன் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் லைக் செய்து கமெண்ட் பதிவிட்டிருப்பது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்கள் சேர்த்தார்.

INDIA vs AUSTRALIA: Australia Captain Pat Cummins, Maxwell liked the worst post on Virat Kohli and Rohit Sharma


இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 243 ரன்காளை விளாசி வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 138 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றதன் மூலமாக ஆஸ்திரேலியா அணியின் வெற்றி இந்திய ரசிகர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஆனால் உலகக்கோப்பையை வென்ற பின் ஆஸ்திரேலியா அணியின் செயல்பாடுகள் மிகவும் கீழ்த்தரமான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை மீது கால் வைத்து ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்செல் மார்ஷ் அவமானம் செய்தார்.


தற்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் மற்றும் முன்னாள் கேப்டன் ஃபின்ச் உள்ளிட்டோர் இந்திய அணி குறித்து மோசமான மீம் ஒன்றை லைக் செய்து கீழ்த்தரமாக நடந்துள்ளனர். ஆஸ்திரேலியா அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றடுத்ததை போலவும், அந்த 11 குழந்தைகளும் இந்திய அணி வீரர்கள் போல் இருப்பது போலவும் முகத்தை மாற்றி கீழ்த்தரமாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவு ஆஸ்திரேலியா மீடியாக்களில் அதிகமாக ட்ரெண்டாகிய நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் அந்த மீம்ஸ் கீழ் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல், முன்னாள் கேப்டன் ஃபின்ச் உள்ளிட்டோர் லைக் செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் டிராவிஸ் ஹெட் தான் தந்தை என்பது போல் உருவாக்கப்பட்டுள்ள பதிவு இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Saturday, November 25, 2023, 15:22 [IST]
Other articles published on Nov 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+