Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் ஒருத்தர் போதும்யா.. பூராப் பேரையும் தூக்கிடுவாரு.. அந்த இந்திய வீரரை கண்டு நடுங்கும் ஆஸி.!

சிட்னி : ஒரே ஒரு இந்திய வீரரை கண்டுதான் ஆஸ்திரேலியா அஞ்சும் நிலையில் உள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் ஒருநாள் தொடரும், அதைத் தொடர்ந்து டி20 தொடரும், டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.

இந்த மூன்று தொடர்களிலும் பும்ரா ஒருவர் தான் ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் வீரராக பார்க்கப்படுகிறார். ஆஸ்திரேலிய அணி அவருக்காக தனியாக திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நல்ல வேகப் பந்துவீச்சாளர்

நல்ல வேகப் பந்துவீச்சாளர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை யாரும் கண்டு கொள்ளாத காலம் இருந்தது. கபில் தேவ், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா என ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கும் ஒரு நல்ல வேகப் பந்துவீச்சாளர் கிடைப்பார்.

பும்ரா

பும்ரா

ஆனால், அவர்கள் சரியான ஜோடி இன்றி தனியாக ஆதிக்கம் செலுத்த முடியாமல் தவித்தனர். ஆனால், தற்போது இந்திய அணியில் பும்ராவின் வரவுக்கு பின் நிலைமை மாறி விட்டது. பும்ராவுக்கு முன்பு இருந்தே அணியில் இருந்த இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் அவருடன் ஜோடி சேர்ந்து ஆதிக்கம் செலுத்தத் துவங்கி உள்ளனர்.

துல்லிய யார்க்கர்

துல்லிய யார்க்கர்

அந்த அளவுக்கு முக்கியமான வேகப் பந்துவீச்சாளராக மாறி உள்ளார் பும்ரா. அவரது துல்லிய யார்க்கர் பந்துவீச்சின் காரணமாக அவரது பந்துவீச்சை எளிதாக அடித்து ஆட முடியாமல் எதிரணிகள் திணறி வருகின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

2020 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் தடுமாறினாலும் அதன் பின் தன் வழக்கமான பந்துவீச்சை செயல்படுத்தினார் பும்ரா. தொடரின் முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். நல்ல பார்மில் இருக்கும் அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க இருக்கிறார்.

சிறந்த ரெக்கார்டு

சிறந்த ரெக்கார்டு

முதலில் நடக்கும் ஒருநாள் தொடரில் பும்ரா நிச்சயம் பங்கேற்பார். ஒருநாள் போட்டிகளில் பும்ரா சிறந்த ரெக்கார்டு வைத்துள்ளார். அவர் அறிமுகம் ஆனதில் இருந்து அதிக விக்கெட் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர்களில் 104 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

பும்ரா திட்டம்

பும்ரா திட்டம்

ஒருநாள் தொடரில் பும்ரா நிச்சயம் மூன்று போட்டிகளிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பதால் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். பயிற்சிக்காக பும்ரா டி20 போட்டிகளிலும் பங்கேற்றால் ஆஸ்திரேலியாவுக்கு தலைவலி காத்துக் கொண்டுள்ளது.

கோலி விடுப்பு

கோலி விடுப்பு

விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ள நிலையில், அவர் விஷயத்தில் ஆஸ்திரேலியா சற்று ஆசுவாசம் அடையலாம். ஆனால், பும்ரா விஷயத்தில் ஆஸ்திரேலியா திட்டமிட்டு ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் சுமை

கூடுதல் சுமை

இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆடுவாரா? என்பது தெரியவில்லை. அவர் காயத்தால் இந்தியாவில் தான் இருக்கிறார். அவர் இல்லாத பட்சத்தில் பும்ராவுக்கு கூடுதல் சுமை ஏற்படும். அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான முடிவாக அமையும்.

Story first published: Wednesday, November 18, 2020, 17:56 [IST]
Other articles published on Nov 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+