Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் வேண்டாம்னா வேண்டாம்.. அவ்ளோதான்.. டிராமா போட்ட பிசிசிஐ.. வெளியான உண்மை!

மும்பை : ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில் சில உண்மைகள் பிசிசிஐயில் இருந்து கசிந்துள்ளது.

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு, பின் தற்போது நீக்கப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்ல மாட்டார் என்பது முன்பே தெரியும் என தற்போது பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறி இருக்கிறார்கள்.

நீக்கி விட்டு சேர்த்த பிசிசிஐ

நீக்கி விட்டு சேர்த்த பிசிசிஐ

ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா தொடரில் முதலில் பிசிசிஐ சேர்க்கவில்லை. அவருக்கு இருந்த தசைப்பிடிப்பை காரணம் காட்டி அவர் நீக்கப்பட்டார். ஆனால், அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதை அடுத்து அவரை டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்தது பிசிசிஐ.

இந்தியா வந்த ரோஹித்

இந்தியா வந்த ரோஹித்

மற்ற வீரர்கள் ஐபிஎல் ஆடி விட்டு நேராக ஆஸ்திரேலியா சென்ற நிலையில், ரோஹித் சர்மாவை இந்தியாவுக்கு அனுப்பி, உடற்தகுதியை நிரூபிக்குமாறு கூறியது பிசிசிஐ. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வந்தார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவர் உடற்தகுதி பெறுவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் சிக்கல் எழுந்துள்ளது.

யார் சொல்லி வந்தார்?

யார் சொல்லி வந்தார்?

பிசிசிஐ அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், ரோஹித் சர்மா யார் சொல்லி துபாயில் இருந்து இந்தியா வந்தார் என்பதே எங்களுக்கு தெரியாது. அது அவராகவே எடுத்த முடிவாக இருக்கலாம் என தற்போது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர்.

ஆஸி. போகவே மாட்டார்

ஆஸி. போகவே மாட்டார்

அவர் ஆஸ்திரேலியா செல்ல மாட்டார் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். குவாரன்டைன் விதிகள் உள்ளது. மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று விட்டார் என சான்றிதழ் அளிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

பிளைட் இல்லை

பிளைட் இல்லை

மேலும், அவர் டிசம்பர் 11 அன்று தான் விளையாட தகுதி அடைந்து விட்டாரா? என தேசிய கிரிக்கெட் அகாடமி பரிசோதனை செய்யும். அவர் டிசம்பர் 12 அன்று ஆஸ்திரேலியா செல்லலாம் எனக் கூறினாலும் எப்படி செல்வார்? எந்த கமர்ஷியல் பிளைட்டும் தற்போது சேவை அளிக்கவில்லை என்றும் கூறி உள்ளனர்.

டிராமா

டிராமா

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்வதில் பல சிக்கல்கள் இருப்பது தெரிந்தும் அவரை இந்தியா அனுப்பி உள்ளது பிசிசிஐ. மேலும், கடும் அழுத்தம் காரணமாகவே அவரை டெஸ்ட் அணியில் சேர்ப்பது போல சேர்த்து விட்டு, தற்போது அவரை நீக்கி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ரோஹித் சர்மா விவகாரம் மிக மோசமாக கையாளப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளைட் இல்லை எனத் தெரிந்தும் அவர் எப்படி இந்தியா அனுப்பப்பட்டார்? இதை எல்லாம் செய்வது யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, November 25, 2020, 11:37 [IST]
Other articles published on Nov 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+