Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. விக்கெட்டை வீழ்த்த திட்டம் தீட்டிக் கொடுத்த ரோஹித்.. வெற்றிகரமாக முடித்த பும்ரா!!

மெல்போர்ன் : இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். முதல் இன்னிங்க்ஸில் ஆறு விக்கெட் எடுத்து அசத்தினார்.

பும்ரா குறிப்பிட்ட ஒரு விக்கெட்டை எடுக்க ரோஹித் கொடுத்த யோசனையை பயன்படுத்தி உள்ளார். அந்த சுவாரஸ்யமான சம்பவம் இது தான்.

அழுத்தம் கொடுக்கலாம்

அழுத்தம் கொடுக்கலாம்

மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரை பும்ரா வீசினார். அப்போது இந்தியா சிறிது நேரம் விக்கெட் இல்லாமல் ஆடி வந்தது. உணவு இடைவேளைக்கு மேலும் விக்கெட் எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கலாம் என்ற சூழல்.

மெதுவா பந்து வீசு

மெதுவா பந்து வீசு

அப்போது, மிட்-ஆஃப் திசையில் பீல்டிங் செய்ய நின்று இருந்த ரோஹித் சர்மா, பும்ராவிடம் "இது தான் கடைசி பந்து. நீ ,மெதுவா பந்து வீச முயற்சி பண்ணலாம்" என கூறியுள்ளார். இந்த வித்தையை குறைந்த ஓவர் போட்டியில் தான் பலமுறை முயற்சி செய்ததால் பும்ராவிடம் அதே யோசனையை தெரிவித்தார் ரோஹித்.

தடுமாறிய ஷான் மார்ஷ்

தடுமாறிய ஷான் மார்ஷ்

அதே போல பும்ரா எப்போதும் வீசும் 140 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து குறைத்து சடாரென 113 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஷான் மார்ஷ் நிலை தடுமாறி பந்தை தன் காலில் வாங்கினார். அது எல்.பி.டபுள்யூ ஆகி தன் விக்கெட்டை இழந்தார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

ரோஹித் - பும்ரா இருவரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் சில ஆண்டுகளாக இணைந்து ஆடி வருகிறார்கள். அங்கே ரோஹித் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஐபிஎல் அணி கேப்டன் பேச்சை கேட்டு அருமையான விக்கெட்டை எடுத்துள்ளார் பும்ரா.

Story first published: Friday, December 28, 2018, 18:38 [IST]
Other articles published on Dec 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+