Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸ் அடிப்பதில் கில்லி யார்? ரோஹித் சர்மா ரெக்கார்டை முறியடித்த தோனி!!

ஹைதராபாத் : தோனி - ரோஹித் சர்மா இடையே ஒரு சுவாரஸ்ய பந்தயம் நடந்து வருகிறது. அந்த பந்தயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வருகிறார்கள்.

அது என்ன பந்தயம்? சிக்ஸர் அடிப்பதில் தான் இருவருக்குள்ளும் போட்டி நடந்து வருகிறது. கடந்த சில வாரங்கள் முன்பு ரோஹித், ஒருநாள் போட்டிகளில் தோனியை முந்தி அதிக சிக்ஸர் அடித்து சாதனை புரிந்தார்.

Also Read | கிரிக்கெட் ரசிகர்களே... இனி சந்தோஷம் தான்... 2022 ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்த்தாச்சு

தோனி 216 சிக்ஸ்

தோனி 216 சிக்ஸ்

இந்நிலையில், தோனி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் அடித்தார். அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். அது தோனியின் 216வது ஒருநாள் போட்டி சிக்ஸர் ஆகும்.

முதல் இடத்தில் தோனி

முதல் இடத்தில் தோனி

இதன் மூலம் தோனி, ரோஹித் சர்மாவை முந்தி ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தோனி 216 சிக்ஸர்களும், ரோஹித் சர்மா 215 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

முதல் போட்டியில் 1 சிக்ஸ்

முதல் போட்டியில் 1 சிக்ஸ்

முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பு இருவரும் 215 சிக்ஸர்கள் அடித்து இருந்தனர். ரோஹித் முதல் போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. அதே சமயம், ஒரு சிக்ஸ் அடித்த தோனி ரோஹித் சர்மாவை முந்தி சிக்ஸர் சாதனை புரிந்தார்.

சிக்ஸர் பட்டியல்

சிக்ஸர் பட்டியல்

இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல் - தோனி 216, ரோஹித் சர்மா 215, சச்சின் 195, சௌரவ் கங்குலி 189, யுவராஜ் சிங் 153, வீரேந்தர் சேவாக் 131.

சர்வதேச அளவில் 4ஆம் இடம்

சர்வதேச அளவில் 4ஆம் இடம்

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள தோனி, ஒட்டுமொத்த சர்வதேச சிக்ஸர்கள் பட்டியலில் சனத் ஜெயசூர்யாவை பின் தள்ளி நான்காம் இடத்தில் இருக்கிறார் தோனி.

தோனி எத்தனை சிக்ஸர்?

தோனி எத்தனை சிக்ஸர்?

சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை சேர்த்து தோனி 353 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஜெயசூர்யா 352 சிக்ஸர்கள் அடித்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். முன்னதாக, இருவரும் நான்காம் இடத்தை பகிர்ந்து இருந்தனர்.

ரோஹித் சர்மா ஆறாம் இடம்

ரோஹித் சர்மா ஆறாம் இடம்

இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 349 சிக்ஸர்களுடன் தோனியை துரத்திக் கொண்டு இருக்கிறார். விரைவில் தோனியை இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ரோஹித் சர்மா முந்துவார் என எதிர்பார்க்கலாம்.

கிறிஸ் கெயில் டாப்

கிறிஸ் கெயில் டாப்

ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார். அவர் 515 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் மலைக்க வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் தான் அவர் 500 என்ற மைல்கல்லை எட்டினார்.

Story first published: Monday, March 4, 2019, 11:46 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+