For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டி20யில் தோனி 1 சிக்ஸ், ரோஹித், கோலி 2 சிக்ஸ் அடிச்சா செமையா இருக்கும்.. ஏன் தெரியுமா?

Recommended Video

Ind vs Aus 2nd T20 | தோனி 1 சிக்ஸ், ரோஹித், கோலி 2 சிக்ஸ் அடிச்சா சாதனை

பெங்களூரு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் தோனி, கோலி, ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் சிக்ஸர்கள் அடிப்பதில் புதிய சாதனை செய்ய வாய்ப்புள்ளது.

தோனி, கோலி சிக்ஸர்களில் அரைசதம் அடிக்கவும், ரோஹித் முதல் இடத்தை பிடிக்கவும் காத்திருக்கிறார்கள்.

சிக்ஸர் பட்டியல்

சிக்ஸர் பட்டியல்

இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார். நான்காவது, ஐந்தாவது இடத்தில் தோனி, கோலி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் 49 மற்றும் 48 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

சிக்ஸர் அரைசதம்

சிக்ஸர் அரைசதம்

இரண்டாவது டி20 போட்டியில் தோனி 1 சிக்ஸ் மற்றும் கோலி 2 சிக்ஸ் அடிக்கும் பட்சத்தில் இருவரும் சிக்ஸர்கள் எண்ணிக்கையில் அரைசதத்தை எட்டுவார்கள். கோலி அதிக சிக்ஸர்கள் அடித்தால் தோனியை முந்தி நான்காம் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

முதல் இடம் பிடிப்பாரா?

முதல் இடம் பிடிப்பாரா?

அதிக சிக்ஸர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, உலகளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அவர் முதல் இடத்தை பிடிக்க இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டும் தேவை.

முதல் மூன்று வீரர்கள்

முதல் மூன்று வீரர்கள்

மூன்றாம் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 86 டி20 இன்னிங்க்ஸ்களில் 102 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் மார்டின் குப்டில் (74 இன்னிங்க்ஸ் 103 சிக்ஸர்கள்), முதல் இடத்தில் கிறிஸ் கெயில் (52 இன்னிங்க்ஸ் 103 சிக்ஸர்கள்) இருக்கின்றனர்.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

இவர்கள் மூவரும் சிக்ஸர் அடிப்பதை விட இந்தியா இரண்டாவது டி20யில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 0-1 என பின் தங்கி உள்ளது. தொடரில் வெற்றி பெற முடியாவிட்டாலும், சமன் செய்யவாவது இந்தியா முயலுமா?

Story first published: Wednesday, February 27, 2019, 13:56 [IST]
Other articles published on Feb 27, 2019
English summary
India vs Australia : Dhoni, Kohli and Rohit Sharma can break or achieve records in sixes in the second T20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X