Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா மீது இனவெறி பேச்சு.. மன்னிப்பு கேட்ட வர்ணனையாளர்.. இனி இப்படி நடக்காது என்று இஷா குகா உறுதி!

பிரிஸ்பேன்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை இனவெறியுடன் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பெண் வர்ணனையாளர் இஷா குகா மன்னிப்பு கேட்டுள்ளார். பும்ராவை பாராட்டுவதற்கு தவறான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறியுள்ள அவர், இனி இப்படி நடக்காது என்றும் தெரிக்வித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் அபார சதத்தால் 445 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் பும்ரா 28 ஓவர்களை வீசி 76 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ind vs aus jasprit bumrah isa guha india vs australia vs

இதன் மூலமாக ஜஸ்பிரிட் பும்ரா பல்வேறு சாதனையையும் உடைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பும்ரா, மொத்தமாக 18 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதனால் இந்திய அணியின் ஒன் மேன் ஆர்மி பும்ரா என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே நேற்றைய ஆட்டத்தின் போது பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் வர்ணனையாளர் இஷா குகா, பும்ரா மீது இனவெறியை வெளிப்படுத்தி இருந்தார். பும்ராவை MVP என்று பாராட்டிய இஷா குகா, MVP என்பதற்கு Most Valuable Primate என்று அர்த்தம் கொடுத்தார்.

Primate என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த உயிரினமாகும். இதனால் பும்ராவை இனவெறியுடன் பேசியதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இஷா குகாவை இனி வர்ணனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று சோசியல் மீடியாவில் விளாசி தள்ளினர். இதனையறிந்த இஷா குகா, இன்றைய ஆட்டத்தின் போது வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய இஷா குகா, நேற்றைய வர்ணனையின் போது பல்வேறு வகையில் புரிந்து கொள்ள கூடிய வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எப்போது மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பதில், எனது செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். எனது வர்ணனையை முழுமையாக பார்த்திருந்தால், பும்ராவை அதிகளவில் பாராட்டி இருந்தேன்.

அவரின் பவுலிங் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்துள்ளது. பும்ராவின் சாதனையை உச்சமாக வர்ணிக்கும் நோக்கில், தவறான வார்த்தை தேர்வு செய்துவிட்டேன். தெற்காசிய பின்னணியில் இருந்து உருவான எனக்கு, அந்த வார்த்தைக்கு பின் எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதையும் தெளிவுபடுத்தி கொள்கிறேன்.

அதேபோல் எனது வார்த்தையால், மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி மீதான கவனம் மாறக் கூடாது என்றும் கருதுவதாக தெரிவித்துள்ளார். இஷா குகா மன்னிப்பு கோரிய போது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் இருந்தனர். இருவருமே இஷா குகா மன்னிப்பு கோரியதற்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையை முடிவுக்கு வந்துள்ளதாக ஆதரவு அளித்தனர்.

Story first published: Monday, December 16, 2024, 13:32 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+