For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பையில் இந்தியா தோல்வி.. எல்லாம் அந்த ஒருத்தனால தான்.. தெறிக்கவிடும் ஆறுதல் மீம்ஸ்!

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மீண்டும் இந்திய அணி தோல்வியடைந்து சோக்கர்ஸ் என்று நிரூபித்துள்ளது. இதனை துப்பாக்கி படத்தில் ஜெயராம், விஜய் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் பேசும் காட்சியுடன் ஒப்பிட்டு, பேசாம தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆர்சிபி.. இந்த 3 அணிகளுக்கும் ஒரு முத்தரப்பு தொடர் வைத்து பார்க்கலாமா.. யாராச்சும் கண்டிப்பா ஜெயிச்சுதான் ஆகணும் என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India lost by 6 wickets against Australia in the World Cup Final

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க முயற்சிக்கிறேன் என்ற பெயரில் பின்பக்கம் மட்டுமே அடிக்க முயற்சித்தார். இதனால் 18 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதனை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடிகர் பகவதி பெருமாளை கிண்டல் செய்யும் வகையில் தொப்பை தள்ளிகிட்டு வந்து பேட்டிங் ஆடக்கூடாது என்று கிண்டல் செய்வார்கள். அந்த புகைப்படத்தை பதிவிட்டு, 360 டிகிரி பிளேயர்னா மைதானம் முழுக்க ஆடணும். அபப்டியே எல்லா பந்தையும் 180 டிகிரிலயே விளையாட கூடாது என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India lost by 6 wickets against Australia in the World Cup Final

நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின் மைதானத்திலேயே கேஎல் ராகுல், சிராஜ் உள்ளிட்டோர் கண்கலங்கி அழுதனர். 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இந்திய அணி, கடைசி போட்டியில் தோல்வியடைந்து உலகக்கோப்பையை பறிகொடுத்தது. இதனால் வீரர்கள் கலங்கியதை போல் ரசிகர்களும் கலங்கினர். இருப்பினும் அவர்களை பாராட்டும் வகையில் thank you champs என்று பாராட்டி கடந்து செல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India lost by 6 wickets against Australia in the World Cup Final

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின் இந்திய அணி ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். அதில் கமல்ஹாசன் வசூல்ராஜா படத்தில், இப்போ ஏன் பதற்றப்படுற.. ஃபிரிட்ஜ் வந்துருக்கு.. அடுத்து ஏசி வரும்.. வாஷிங் மெஷின் வரும்.. எல்லாத்தையும் பயன்படுத்திக்கோ என்று சொல்வார். அதுபோல் பிசிசிஐ இந்திய ரசிகர்களை பார்த்து, இப்போ ஏன் சோகமா இருக்க.. இன்னும் 4 நாட்களில் ஆஸ்திரேலியா டி20 தொடர் வருது.. பின்னாடியே தென்னாப்பிரிக்கா டி20 தொடர் வருது.. அந்த டிராபி எல்லாம் நமக்கு தான் என்று கூறுவது போல் உருவாக்கப்பட்டுள்ள சர்காஸத்தின் உச்சம்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India lost by 6 wickets against Australia in the World Cup Final

சண்டைக்கோழி படத்தில் காசியை தான் அடித்துவிட்டேன் என்று தெரிந்த பின், விஷால் இன்னும் கோபமாக அடிக்க தொடங்குவார். அதுபோல் ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட், இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்றதும் சதம் விளாசியதாக உருவாக்கப்பட்டுள்ள ரசிகர்களின் குமுறல். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்விக்கும் இவரே காரணம் என்பது கூடுதல் சோகம்.

Story first published: Monday, November 20, 2023, 9:40 [IST]
Other articles published on Nov 20, 2023
English summary
INDIA vs AUSTRALIA World Cup FINAL 2023: Fantastic Memes from social media after India lost by 6 wickets against Australia in the World Cup Final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+