Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”நீங்க சாம்பியன்ஸா.. யாரும் கண்டுக்காதீங்க” வெற்றிபெற்றும் அடிவாங்கும் இந்திய அணி.. அசத்தல் மீம்ஸ்!

பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு கடைசி டி20 போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல் இந்த தொடரில் 4 முறை ஆஸ்திரேலியா அணியும், ஒரு முறை இந்திய அணியும் டாஸை வென்றுள்ளன. இதனை பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு, ரமேஷ் கண்ணாவிடம், சம்பளம் இல்லாம வேலை பார்க்குறதுக்கு நான் ஒத்துக்கிட்டேன்ல.. அதேமாதிரி சாப்பிடுறதுக்கும், தங்குறதுக்கும் நீ ஒத்துக்கணும் என்று கூறுவார். அதனை மாற்றி அப்படியே ஆஸ்திரேலிய அணி, டாஸ் எங்களுக்கு.. மேட்ச் உங்களுக்கு என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India won the T20 Series by 4-1 against Australia

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அர்ஷ்தீப் சிங் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனை வடிவேலுவின் குடிகாரக்கார கதாபாத்திரம் பின் பக்கத்தில் குத்துவதை போல், காப்பாத்திட்ட டா.. காப்பாத்திட்டா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India won the T20 Series by 4-1 against Australia

ஆஸ்திரேலியா அணியின் ஃபினிஷர் டிம் டேவிட் இந்த டி20 போட்டிகளில் விளையாடி ஒருமுறை கூட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனை கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் பவர் ஸ்டார் தந்தையாக நடித்த நடிகர், என் பெரிய பையன் ஜட்டி போட்டு வந்தா நீங்கலாம் காலி டா என்று சொல்லுவார். அதனை மாற்றி டிம் டேவிட்டிற்கு ஆதரவாக மும்பை ரசிகர்கள், "ஐபிஎல் வரட்டும்.. நீங்கலாம் காலிடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல் ரகம்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India won the T20 Series by 4-1 against Australia

அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. தற்போது அதற்கு பழிதீர்க்கும் வகையில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில், பரிதாபங்களில் வரும் கோபியை சுதாகர் இவரை யாரும் கண்டுக்காதீங்க என்று கூறுவார். அதுபோல் இந்திய அணியை யாரும் கண்டுகொள்ள தேவையில்லை என்று கூறி உருவாக்கப்பட்டுள்ள மீம் குஜால் ரகம்.

INDIA vs AUSTRALIA: Fantastic Memes from social media after India won the T20 Series by 4-1 against Australia
Story first published: Monday, December 4, 2023, 12:27 [IST]
Other articles published on Dec 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+