For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாயடைத்து போன அஸ்வின்.. நேற்று நடந்ததை நம்ப முடியல.. சுக்கு நூறாகி விட்டோம் என வேதனை

சென்னை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய தோல்வியை தழுவி ஒரு நாள் ஆகிவிட்டது. ஆனால் அதிலிருந்து இந்திய அணி வீரர்கள் இன்னும் மீளவில்லை.

பலரும் தோல்விக்கு பிறகு அடுத்த நாள் தான் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய மன வேதனையை வார்த்தைகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். இதில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் விதிவிலக்கல்ல.

India vs australia final 2023 - R Ashwin says he was unbelievable after seeing yesterday result

எப்போதும் வார்த்தைகளில் விளையாடும் அஸ்வின் இன்று தன்னுடைய வலியை வெளிப்படுத்தி இருக்கிறார். அஸ்வின் இந்த உலகக் கோப்பையில் விளையாட முதல் அணியில் இல்லை. அக்சர் பட்டேல் காயம் அடைந்ததை அடுத்துதான் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மாற்று வீரராக உலகக் கோப்பை போட்டிக்கு சென்றார்.

உலகக்கோப்பைக்கு சென்றும் அஸ்வின் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லீக் சுற்றில் விளையாடினார். இதனால் மீண்டும் அஸ்வின் இறுதிப் போட்டிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது காரணம் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கில்லாடி. இதனால் பெரும் ஆர்வத்துடன் இருந்த அஸ்வினுக்கு அணியில் இடம் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால் அதன் பிறகு தான் அவருடைய இதயம் சுக்கு நூறாக இந்த தோல்வியின் மூலம் உடைந்து விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வீரர் அஸ்வின் நேற்று இரவு எங்கள் இதயங்கள் மிகப்பெரிய பிளவை சந்தித்தது சுக்குநூறாக நாங்கள் உடைந்து விட்டோம். இந்தத் தொடரை அணியில் உள்ள யாரும் அவ்வளவு விரைவில் மறக்க மாட்டார்கள்.

அவ்வளவு அழகான நாட்கள் இருந்தது விராட் கோலி சமி ரோகித் சர்மா ஆகியோரெல்லாம் சிறப்பாக செயல்பட்டார்கள். அதேசமயம் தம்மால் ஆஸ்திரேலிய அணியை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. மாடர்ன் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆண்டை என ஆஸ்திரேலியா நிரூபித்து விட்டார்கள். நேற்று இரவு ஆடுகளத்தில் அவர்கள் வெளிப்படுத்திய திறமையை பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை.ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு என் பாராட்டுக்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 20, 2023, 23:38 [IST]
Other articles published on Nov 20, 2023
English summary
India vs australia final 2023 - R Ashwin says he was unbelievable after seeing yesterday result வாயடைத்து போன அஸ்வின்.. நேற்று நடந்ததை நம்ப முடியல.. சுக்கு நூறாகி விட்டோம் என வேதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+