Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வடை போச்சே!! ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த “லட்டு” வாய்ப்பு!

மும்பை : இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். உலகக்கோப்பைக்கு முன் நடக்கவுள்ள கடைசி தொடரில் பண்டியா நீக்கப்பட்டுள்ளதால் பல்வேறு யூகங்களுக்கு இது வழி வகுத்துள்ளது.

கடைசி தொடர்

கடைசி தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் பிப்ரவரி 24 முதல் இந்தியா 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த தொடர் தான் உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர்.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

அதனால், இந்த தொடருக்கு தேர்வாகும் வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம் பெற மிக அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணியில் ஹர்திக் பண்டியா காயம் அடைந்து, இந்த தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

பிசிசிஐ செய்தி

பிசிசிஐ செய்தி

பிசிசிஐ இது குறித்து வெளியிட்ட செய்தியில் அடி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஏன் ஓய்வு?

ஏன் ஓய்வு?

மேலும், பிசிசிஐ மருத்துவ குழு அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அவர் காயத்தில் இருந்து மீண்டு வர அவகாசம் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

ஒருநாள் அணியில் ஜடேஜா

ஒருநாள் அணியில் ஜடேஜா

டி20 தொடரில் பண்டியாவுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், ஒருநாள் அணியில் ஜடேஜா மாற்று வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். உலகக்கோப்பை அணிக்கு ஜடேஜா தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என முன்பு கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வாய்ப்பு ஜடேஜாவுக்கு முக்கியமானதாகும்.

உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவாரா?

உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவாரா?

ஜடேஜா ஆஸி, தொடரில் களமிறங்கி ஆட வாய்ப்பு கிடைத்தால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டு உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். அதே சமயம், பண்டியா இல்லாதது, விஜய் ஷங்கருக்கும் முக்கிய வாய்ப்பாகும்.

Story first published: Thursday, February 21, 2019, 16:42 [IST]
Other articles published on Feb 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+