Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவை காயத்தோடு பீல்டிங் செய்ய வைத்தாரா கோலி? வெடிக்கும் புதிய சர்ச்சை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜடேஜாவை அணியில் சேர்க்காதது குறித்து வந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, ஜடேஜா காயத்தோடு இருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த விஷயம் தற்போது தேர்வுக் குழு, ரவி சாஸ்திரி, கோலி, பிசிசிஐ ஆகியோரை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்ப வித்திட்டுள்ளது.

ஜடேஜா பற்றிய கேள்விகள்

ஜடேஜா பற்றிய கேள்விகள்

குறிப்பாக, ஜடேஜா காயத்தில் இருந்தார் என்றால் எதற்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் நீண்ட நேரம் பீல்டிங் செய்தார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், காயத்தோடு உள்ள ஒருவரை எதற்காக ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜடேஜா பற்றி பேசாத கோலி

ஜடேஜா பற்றி பேசாத கோலி

இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவியது. அதற்கு சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் ஆடியது தான் காரணம் என கூறப்பட்டது. கோலி தாங்கள் பெர்த் மைதான ஆடுகளத்துக்கு வேகப் பந்துவீச்சாளர்களே போதும் என நினைத்தோம் எனக் கூறி ஜடேஜாவின் காயத்தை பற்றி எதுவுமே பேசவில்லை.

காயம் எப்படி ஏற்பட்டது?

காயம் எப்படி ஏற்பட்டது?

ஆனால், ரவி சாஸ்திரி தன் பேட்டியின் போது ஜடேஜா காயத்தை பற்றி உளறி விட்டார். அது பெரும் புயலை கிளப்பி விட்டது. ஜடேஜாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின், அவர் சிகிச்சை பெற்று ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் 64 ஓவர்கள் வீசி இருக்கிறார்.

காயம் எப்படி ஏற்பட்டது?

காயம் எப்படி ஏற்பட்டது?

ஆனால், ரவி சாஸ்திரி தன் பேட்டியின் போது ஜடேஜா காயத்தை பற்றி உளறி விட்டார். அது பெரும் புயலை கிளப்பி விட்டது. ஜடேஜாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின், அவர் சிகிச்சை பெற்று ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் 64 ஓவர்கள் வீசி இருக்கிறார்.

சிகிச்சை பெற்றும் குணமாகாத காயம்

சிகிச்சை பெற்றும் குணமாகாத காயம்

எனினும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு வந்த பின்னர் அவருக்கு தோள்பட்டையில் வலி இருந்ததாகவும், அதற்கு ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், காயம் இரண்டாவது டெஸ்ட் முடியும் வரை குணமாகவில்லை என கூறப்படுகிறது.

ஏன் பீல்டிங் செய்தார்?

ஏன் பீல்டிங் செய்தார்?

அப்படி என்றால், காயத்தோடு உள்ள ஒரு வீரரை கேப்டன் கோலி ஏன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பீல்டிங் செய்ய வைத்தார்? இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியில் ஏன் அவரது பெயரை இணைத்தார் என்பதும் புரியவில்லை.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

ஜடேஜா காயம் பற்றி பிசிசிஐ அளித்துள்ள விளக்கத்தில் இந்தியாவில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தகுதியோடு தான் அவர் ஆஸ்திரேலியா சென்றார் என்றும் கூறியுள்ளது. தற்போது மூன்றாவது டெஸ்டில் ஆடும் அளவுக்கு அவர் தகுதி பெற்று வருகிறார் எனவும் கூறியுள்ளது.

Story first published: Monday, December 24, 2018, 11:46 [IST]
Other articles published on Dec 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+