Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முரளி விஜய், ராகுல் அதிரடி நீக்கம்.. ரோஹித், ஜடேஜா உள்ளே.. 3வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. தொடரை கைப்பற்ற அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 11 வீரர்கள் கொண்ட அணியில் துவக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் கே எல் ராகுல் இடம் பெறவில்லை.

முரளி விஜய் - ராகுல் மோசம்

முரளி விஜய் - ராகுல் மோசம்

முரளி விஜய் - ராகுல் இருவரும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலாக ஆடினர். இந்திய பேட்ஸ்மேன்களில் மிக மிக மோசமாக ஆடியது இவர்கள் இருவர் மட்டுமே. இவர்களால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் அழுத்தம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், இருவருமே நீக்கப்பட்டுள்ளனர்.

துவக்க வீரர்கள் யார்?

துவக்க வீரர்கள் யார்?

ஹனுமா விஹாரி, மாயங்க் அகர்வால் இருவரும் துவக்க வீரர்களாக ஆட உள்ளார்கள் என தெரிகிறது. ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பதால் அவர் இறங்க வாய்ப்பு உண்டு என்றாலும், அவரது பெயர் மிடில் ஆர்டருக்கான இடத்தில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாயங்க் அகர்வால் அறிமுகம்

மாயங்க் அகர்வால் அறிமுகம்

மாயங்க் அகர்வால் தன் முதல் டெஸ்டில் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக இவரை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வந்த நிலையில், ப்ரித்வி ஷாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பிடித்து டெஸ்டில் அறிமுகம் ஆக உள்ளார்.

ஜடேஜா இடம் பெற்றார்

ஜடேஜா இடம் பெற்றார்

இரண்டாவது போட்டியில் ஜடேஜாவை களம் இறக்காதது சர்ச்சையான நிலையில், மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பு பெற்றுள்ளார் ஜடேஜா. அஸ்வின் அணியில் இடம் பெறவில்லை. அவரை காயம் காரணமாக அணியில் சேர்க்கவில்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.

பண்டியாவுக்கு இடம் இல்லை

பண்டியாவுக்கு இடம் இல்லை

ஹர்திக் பண்டியாவுக்கும் இந்த டெஸ்டில் இடம் கிடைக்கவில்லை. அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான உத்தேச அணியில் காயம் காரணமாக இடம் பெறவில்லை. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான உத்தேச அணியில் இடம் பிடித்த அவர் மூன்றாவது டெஸ்டில் களம் இறங்கவில்லை.

வீரர்கள் யார்?

வீரர்கள் யார்?

துவக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் - ஹனுமா விஹாரி, மிடில் ஆர்டரில் புஜாரா, கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பந்துவீச்சில் ஜடேஜா, ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் களம் இறங்க உள்ளனர்.

மூன்றாவது டெஸ்ட் - இந்திய அணி

மூன்றாவது டெஸ்ட் - இந்திய அணி

இந்திய அணி - கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.

Story first published: Tuesday, December 25, 2018, 11:03 [IST]
Other articles published on Dec 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+