Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

24 வயதில் இவ்வளவு கோடி வருமானமா.. சுப்மன் கில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!

மும்பை: இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் 24 வயதிலேயே கோடிக்கணக்கில் குவித்துள்ள சொத்துகள் பற்றி பார்க்கலாம்.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில். நடப்பு ஆண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள், ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் விளாசிய வீரர், இரட்டை சதம் விளாசிய வீரர் என்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அதேபோல் நடப்பாண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 அரைசதங்கள், 9 அரைசதங்கள் என்று வேற லெவலில் ஃபார்மில் இருக்கிறார்.

INDIA vs AUSTRALIA: Indian young batsmen Shubman Gill Net Worth is aroun Rs.32 Crores per annum

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு தாவியுள்ளார். இதன் காரணமாக குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் இளம் வயதிலேயே பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன்படி சுப்மன் கில் பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ரூ.3 கோடி, ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.8 கோடி, ஒவ்வொரு டி20 போட்டிக்கும் ரூ.3 லட்சம், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சம், ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் ஊதியமாக பெற்று வருகிறார். அதேபோல் சுப்மன் கில் சொந்தமாக 2 கார்களை வைத்துள்ளார்.

ரேன்ச் ரோவர் எஸ்யூவி காரும், மஹிந்திரா தார் ஜீப்பும் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1 முதல் 1.5 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாப் மற்றும் ஃபிரோஸ்பூரில் சொந்தமாக வீடுகளை வாங்கியுள்ளார் சுப்மன் கில். இதுமட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சுப்மன் கில் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக கேசியோ, பஜாஜ் அலையன்ஸ், டாடா கேப்பிட்டல், பீட் எக்ஸ்பி, என்கேஜ், மஸ்ஸில் பிளேஸ், சியர் டயர்ஸ், ஜில்லட் நிறுவனம், ஆக்கோ இன்சூரன்ஸ், பாரத் பே, மை லெவன் சர்க்கிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சுப்மன் கில் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார். மேலும் ட்விட்டரில் 5 மில்லயனுக்கும் அதிகமான ஃபாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனுக்கும் அதிக ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.32 கோடி வரை சுப்மன் கில் வருவாய் ஈட்டி வருகிறார்.

சிறிய வயதிலேயே கோடிக்கணக்கில் சுப்மன் கில் வருவாய் ஈட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

Story first published: Sunday, December 3, 2023, 1:45 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+