Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

11 vs 1.. ஒற்றை ஆளாக போராடி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா.. கபில் தேவ் சாதனை முறியடிப்பு!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலமாக வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தனி வீரராக போராடி வருகிறார். 2வது நாள் ஆட்டம் தொடங்கிய போதே கவாஜா மற்றும் மெக்ஸ்வீனி விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் பும்ரா. இதன்பின் லபுஷேன் விக்கெட்டை நிதீஷ் குமார் ரெட்டி வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்தார்.

ind vs aus border gavaskar trophy jasprit bumrah

இதனால் இந்திய அணி விரைவாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் என்று பார்க்கப்பட்ட போது, ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது இந்திய அணியின் பும்ரா ஒரு பக்கம் கட்டுப்பாட்டுடன் பவுலிங் செய்தாலும், ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் இருவரும் எளிதாக பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தனர்.

ட்ராவிஸ் ஹெட் அதிரடி காட்டும் போது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் கொஞ்சம் கூட திட்டத்திற்கு ஏற்ப பவுலிங் செய்யாமல், எளிதான லைன் மற்றும் லெந்தில் பவுலிங் செய்து ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதன்பின் புதிய பந்து கைகளுக்கு வந்த பின் உடனடியாக தனது மேஜிக்கை காட்டினார் பும்ரா. ஸ்டீவ் ஸ்மித்தை 101 ரன்களில் வீழ்த்திய அவர், மிட்சல் மார்ஷ் மற்றும் ட்ராவிஸ் ஹெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலமாக ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரிட் பும்ரா 12வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் 10 முறை ஆசியாவுக்கு வெளியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல் SENA நாடுகளில் ஜஸ்பிரிட் பும்ரா 8வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா முறியடித்துள்ளார். அதேபோல் வெளிநாடுகளில் 3 வடிவங்களிலும் சேர்த்து ஜஸ்பிரிட் பும்ரா 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் கபில் தேவ் 10 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வந்த நிலையில், பும்ரா முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

Story first published: Sunday, December 15, 2024, 12:41 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+