தோனியை பார்த்தாலே போதும்.. நமக்கு நம்பிக்கை வந்துவிடும்.. தோனியை புகழும் இந்திய வீரர்!
Recommended Video

ஹைதராபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் போட்டியில் கேதார் ஜாதவ் - தோனி இணை பொறுப்பாக ஆடி 141 ரன்களுக்கு அசைக்க முடியாத கூட்டணி அமைத்தது.
அந்த போட்டியில் தோனியின் அறிவுரைகளை அவ்வப்போது பெற்ற கேதார் ஜாதவ், தோனி குறித்து பேசினார். தோனியைப் பார்த்தாலே நம்பிக்கை வந்துவிடும் என்று கூறினார்.
Also Read | தினேஷ் கார்த்திக்கை விட்ராதீங்க.. உலககோப்பையில் கட்டாயம் அணியில் இடம் கொடுங்கள்... இது மைக் ஹஸ்சி

பினிஷர் ஜாதவ்
அணியில் தன் இடம் குறித்து பேசிய கேதார் ஜாதவ், தான் கடந்த 2017 ஜனவரியில் நடந்த இங்கிலாந்து தொடர் முதல் அணியில் 5 அல்லது 6வது இடத்தில் தான் களமிறங்கி வருவதாகவும், அணி நிர்வாகம் தன்னை பினிஷர் என்ற அளவிலேயே பார்க்கிறது என்றும் கூறினார்.

நம்பிக்கை வரும்
முதல் போட்டியில் 237 ரன்களை சேஸ் செய்தது குறித்து பேசிய ஜாதவ், தோனி எந்தளவு தனக்கு உதவியாக இருக்கிறார் என்பது குறித்து பேசினார். "ஒவ்வொரு முறை நான் அவருடன் பேட்டிங் செய்யும் போதும், நேரம் செலவிடும் போதும் நிறைய கற்றுக் கொள்கிறேன். தோனியை பார்த்தாலே நான் நம்பிக்கையாக உணர்வேன். அப்படி ஒரு மனிதர் அவர்" என்றார் ஜாதவ்.

தோனியின் ஆரா
மேலும், "அவரது "ஆரா" எப்படிப்பட்டது என்றால் அவரை பார்த்தாலே, "இன்று நம்மால் இதை செய்ய முடியும்" என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வீர்கள். அவர் ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் சிறந்த பங்களிப்பை வெளிக்கொணரும் திறமை பெற்றவர்" என்றும் தோனி குறித்து கூறினார் ஜாதவ்.

அரைசதம் அடித்தனர்
முதல் போட்டியில் இந்தியா 99 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்த போது ஜோடி சேர்ந்த ஜாதவ் - தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெறச் செய்தனர். தோனி 59*, கேதார் ஜாதவ் 81* ரன்கள் குவித்தனர். முதல் போட்டியில் பந்துவீச்சில் ஜாதவ் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications